ஓய் என்னடி ஆச்சு ஏதோ கனவு கண்டுகிட்டு இருக்க காலைல வேல பாக்காம,நிவேதிதா.
அது ஒன்னும் இல்ல டி காலைல அம்மா என்கிட்ட வந்து என்று காலையில் கூறியதை சொல்ல ஆரம்பித்தாள் தமிழ் என்ற தமிழினியா.
அவசர அவசரமாக கிளம்பி கொண்டு இருக்கும் போது தமிழ் என்று தனலட்சுமி அழைக்க, என்ன மா,தமிழ்.
இல்லடா ஒன்னோட அத்த பொண்ணு கேட்குறங்க டா என்றார்.
மா என்ன இது நா வேலைக்கு போய் 6 மந்த் தான ஆகுது அதுக்குள்ள எனக்கு எதுக்கு மா கல்யாணம், தமிழ்.
இல்லடா அவங்க பையனுக்கு இப்போவே கல்யாணம் பண்ணாதான் இல்ல 3 வருஷம் கழிச்சு தான் கல்யாணம் ஆகுமா அதுனால தான் டா, தனலட்சுமி.
அப்போ வேற பொண்ண பாக்க சொல்லுங்க ,தமிழ்.
என்னடா இது ஒன்னோட பாட்டியோட கடைசி ஆச டா,தமிழ்.
அப்பா என்ன சொன்னாங்க நீ என்ன சொல்லுறேன்னு கேட்டாங்க டா, தனலட்சுமி.
சரிமா ஒனக்கும் அப்பாக்கும் என்ன விருப்பமோ அதையே பண்ணுங்க என்று சொல்லி தன் வண்டியில் ஆஃபீஸ் க்கு கிளம்பினாள்.
இவ்வாறு காலையில் நடந்ததை கூற
இதுக்கு தா இப்டி கவலபடுரையா எனக்கு எங்க வீட்டுல கல்யாணம் பண்ணி வைக்க மாட்டிக்குறாங்கனு நா கவல படுறேன் நீ என்னடான்னா, நிவி.
அது இல்லடி சும்மாவே எனக்கும் அவனுக்கும் ஆகாது நா அவன சின்ன வயசுல பார்த்தது அப்போவே அவன் ரொம்ப திமிரு புடிச்சவன் இப்போ எப்டி இருக்கானோ ,தமிழ்.
விடுடி நம்ம சொட்ட தல மேனேஜரையே சமாளுச்சுறுவ இதெல்லாம் ஒனக்கு ஒரு பிரச்சனை யா,நிவி.
மறுபடியும் ஏதோ யோசனை செய்ய அடியே லூசு நீ யோசிச்சது போதும் வேலைய பாரு இல்ல அந்த ஆள் வந்து கத்துவாறு என்றாள்,நிவி.
ஒருவாறு அந்த நாள் கழிய சரிடி பாய் டைம் ஆச்சு நா வீட்டுக்கு கெளம்புறேன்,தமிழ்.
ஓய் வீட்டுக்கு போய் மாப்பிள்ள போட்டோ பாத்துட்டு எனக்கு வாட்ஸ் அப்பில சென்ட் பண்ணு என்றால், நிவி.
அப்போ நல்லா இருந்த நீயே அவன கட்டிக்க ஓகே வா,தமிழ்.
நோ பேபி எனக்கு னு ஒருத்தன் போறந்துருப்பான்,நிவி.
சிரித்து விட்டு கனவு காணாம பாத்து வீட்டுக்கு போ லூசு, தமிழ்.
அது எனக்கு தெரியும் நீ பாத்து போ டி, நிவி.
இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர்.