என் இனிய மணாளனே-35

2.1K 84 6
                                    

ஷ்ரவன்,தமிழ், ஷாம், நிவி நால்வரும் ஷ்ரவன் மற்றும் ஷாம் நண்பன் திருமணத்திற்கு ஊட்டி செல்ல இருந்தனர்.

ஷ்ரவன் அறையில் அமர்ந்து லேப்டாப்பில் வேலை பார்த்து கொண்டு இருக்க  ஷ்ரவனின் போன் அலறியது லேப்டாப்பில் இருந்து பார்வையை விலக்கி அதனை பார்த்து அட்டன் செய்து காதில் வைத்து சொல்லு மச்சி என்ன டா என்று கேட்க

ஷாம் அடப்பாவி என்னடா இப்படி கேட்குற நாளைக்கு காலைல நாம ஊட்டி கிளம்பனும் நியாபகம் இருக்கா இல்லையா என்று அலற

ஷ்ரவன் சிரித்துவிட்டு நியாபகம் இருக்கு டா ப்ரோக்ராம் ல எந்த சேஞ்சும் இல்ல ஓகே வா என்று கூற

இப்போ தான் மச்சி எனக்கு நிம்மதியா இருக்கு எங்க நீ எப்பவும் போல வரலனு சொல்லிருவியோ னு பயந்துட்டேன் நீ மட்டும் வரல நா செத்தேன் வருண் என்ன கொன்னுடுவான் என்று ஷாம் கூற

அதற்கு ஷ்ரவன் சிரித்துவிட்டு நீ கவலப்பட தேவையே இல்லை மச்சி வாரேன் என்று கூற

ஷாம் ம்ம் ஓகே மச்சி நாளைக்கு நானும் நிவியும்  காலைலயே கிளம்பி அங்க வந்துறோம் நீயும் தமிழும் ரெடியா இருங்க ஓகே என்று கூற

ஷ்ரவன் சரி ஓகே மச்சி நாங்க ரெடியா இருக்கோம் என்று கூறி போனை கட் செய்ய சரியாக தமிழ் அறையில் நுழைந்தாள்.

ஷ்ரவன் நாளைக்கு போறதுக்கு எல்லாம் எடுத்து வச்சிட்டியா என்று தமிழை பார்த்து கேட்க தமிழ் ம்ம் எடுத்து வச்சிட்டேன் மாமா என்று கூற ஷ்ரவன் ம்ம் ஓகே டி நீ தூங்கு எனக்கு கொஞ்சம் வேல இருக்கு நாளைக்கு காலைல சீக்கிரம் கிளம்பனும் என்று கூற

தமிழ் ம்ம் சரி மாமா என்று கூறி ஷ்ரவனை பார்த்தவாறே படுத்து கொண்டு அப்படியே தூங்கியும் போனால் சிறிது நேரத்தில் ஷ்ரவன் தனது வேலையை முடித்து விட்டு உறங்கும் தன்னவளை பார்த்தவாறே  உறங்கினான்.

மறுநாள் காலையில் இருவரும் கிளம்பி கீழே வர ஷாம் மற்றும் நிவி அமர்ந்து கொண்டு இருக்க பின் அனைவரிடமும் சொல்லி கொண்டு ஊட்டியை நோக்கி காரில் பயணமாகினர்.

என் இனிய மணாளனே!!Where stories live. Discover now