ஷாம் மச்சி அங்க பாரு நீ எதிர் பார்த்த ஆளு வந்தாச்சு என்று கூற ஷ்ரவன் திரும்பி பார்க்க அப்படியே மெய் மறந்து நின்று விட்டான் அவன் ஷர்மியை பார்த்து...........
அங்கு ஷர்மி அடர் நீல நிற பட்டில் தேவதையாக தன் தோழிகள் நடுவில் வந்து கொண்டு இருந்தாள்.
ஷ்ரவன் தன்னை மறந்து அவளை ரசித்து கொண்டு இருந்தான்.
அடர் நீல நிற பட்டு நேர்த்தியாக உடுத்தி பேசும் விழிகளுக்கு மைதீட்டி புருவங்கள் நடுவில் சிறு பொட்டு ஒன்று வைத்து அளவான ஒப்பனைகளுடன் இடைவரை இருந்த கூந்தலை பின்னி அதில் மயக்கும் மணமுடைய மல்லியை சூட்டி தேவதையாய் வரும் ஷர்மியை கண்டு மூச்சுவிடவும் மறந்து தான் போனான்.
அதேபோல் இரண்டு வருடங்களுக்கு பின் ஷ்ரவனை பார்க்க ஷ்ரவன் அவளின் புடவை நிறத்திலே சட்டை அணிந்து வேஷ்டி கட்டி கம்பிரமாக நிற்கும் ஷ்ரவனை பார்த்து விட்டு அவனை தன் கண்களில் நிரப்பி விட்டு அவனை பார்த்தும் பார்க்காதது போல அவனை தாண்டி சென்றால் அவளை கண்டதும் அவள் தன்னிடம் வந்து பேசுவால் என்று எதிர்பார்த்த ஷ்ரவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கல்யாணம் இனிதே அரங்கேறியது ஷ்ரவன் ஷர்மி தன்னிடம் வந்து பேசுவால் என்று எதிர்பார்த்த ஷ்ரவன் பொறுமை இழந்து ஷர்மி ஒரு அறைக்குள் நுழைவதை பார்த்த ஷ்ரவன் அவள் பின்னே சென்று கதவை மூட கதவு அடைக்கும் சத்தத்தில் திரும்பி பார்த்த ஷர்மி கதவில் சாய்ந்து மார்பின் குறுக்கே கையை கட்டி கொண்டு நிற்க்கும் ஷ்ரவனை பார்க்க
ஷ்ரவன் என்ன மேடம் என்ன நியாபகம் இருக்கா
ஏன் இல்ல சார் அதெல்லாம் நல்லாவே இருக்கு
அப்றம் எதுக்கு என்ன கண்டுகாத மாதிரி போன
ம்ம் அது வேற ஒன்னும் இல்ல ரெண்டு வருஷம் என்ன எவ்ளோ கஷ்ட படுத்துணிங்க அதான் ஆமா இப்போவும் ஒங்க மேல வச்சிருக்க லவ் அப்டியே இருக்கு நீங்க தான சொன்னிங்க இப்போ என்ன சொல்ல போறீங்க ம்ம் என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க ம்ம் கொஞ்சம் யோசிக்க டைம் வேணும்