டேய் ஷ்ரவன் சீக்கிரம் வாடா காலேஜ்க்கு டைம் ஆச்சு என்று ஷாம் ஹாலில் உட்கார்ந்து கத்தி கொண்டு இருந்தான்.
இருடா சாப்பிட்டு போலாம்,என்று ஷ்ரவன் மேலிருந்து ஹால்லிற்கு வந்தான்.
ஏ டைம் ஆச்சு ஏ புரிஞ்சிக்க மாட்டிக்குற
சீத்தா, டேய் இன்னிக்கு தான காலேஜ் ரிஓப்பன் ஆகுது அப்றம் எதுக்கு நீ இப்டி கெளம்பு கெளம்பு னு அவன அவசரப்படுத்திக்கிட்டு இருக்க
அது ஒன்னும் மா என்று ஷாம் மென்று முழுங்க
நீ சரி இல்லையே அப்போ ஏதோ இருக்கு என்று ஷ்ரவனை பார்க்க அவனோ ஷாமை பார்த்து சிரித்து கொண்டு இருந்தான்.
ஷ்ரவன் நீ சொல்லு,சீத்தா.
அவன் ஷாமை பார்க்க டேய் சொல்லாத என்று கண்களால் கெஞ்ச ஷ்ரவன் அதை கண்டுகொள்ளாமல்
அது ஒன்னும் இல்ல மா இன்னைக்கு first year எல்லாம் வாராங்களா அதன் சீக்கிரம் போய் சைட் அடிக்க தான் sir இவ்ளோ அவசரப்படுறாரு
அதான பாத்தான் எலி எதுக்கு சுவட்டர் போடுத்துன்னு இப்போ தான தெரியுது இவனாவது காலேஜ் போக இவ்ளோ அவசரமா போறதாவது
மா இந்த வயசுல இதலாம் பண்ணாம வேற எப்போ பண்றது, ஷாம்.
ஓ அப்டியா நா call பண்ணி வள்ளி கிட்ட சொல்லுறேன்
தெய்வமே அப்டி ஏதும் செஞ்சுராதிங்க அவ்ளோ தான் அப்றம் வள்ளி அவங்க புருஷர் கிட்ட சொல்லி வரதராஜன் தொரத்தி தொரத்தி அடிப்பாரு என்று அலற
ஷ்ரவனும் சீத்தாவும் இருவரும் அவனை பார்த்து சிரித்தனர்.
பின் ஷாம் ஷ்ரவன் இருவரும் சாப்பிட்டு கல்லூரியை நோக்கி சென்றனர்.
சென்னையில் உள்ள ஒரு பிரபலமான கல்லூரியில் இருவரும் எம்.பி.ஏ ஃபைனல் இயர் படிக்கிறாங்க இருவரும் கல்லூரியில் நுழைந்தனர்.
இருவரும் அங்கு சென்று அவர்கள் நண்பர்களுடன் இணைந்து கொண்டனர்.
ஷாம், டேய் ராம் எல்லாரும் வந்துட்டாங்களா
இல்ல டா நம்ம தான் first,
ஓ அப்போ ok டா நா என்னமோ எல்லாரும் மொதல்லையே போயிடாங்களோ நினைச்சேன்.
