தமிழ் எரிச்சலுடன் சுடியை பார்த்து கொண்டு இருந்தாள்.
இவரு ஏ தான் இப்டி பன்றாரோ ச்சே எப்போ பாரு வேல வேல ன்னு என்று புலம்பி கொண்டு இருக்க என்ன டி என்ன திட்டிக்கிட்டு இருக்க போல என்று என்று கேட்டு கொண்டே அவள் அருகில் வந்து ஷ்ரவன் நிக்க திரும்பி அவனை முறைத்து விட்டு முகத்தை திருப்பி சுடியை பார்க்க ஆரம்பித்தாள்.
ஏ நா கேட்டுட்டே இருக்கேன் என்னடி கொழுப்பா பதில் சொல்ல முடியாதோ என்று ஷ்ரவன் கேட்க்க அவள் ஏதும் பேசாமல் பிங்க் நிற சுடி ஒன்றை எடுத்து கொண்டு எழுந்து அனைவரும் இருக்கும் இடத்துக்கு சென்று விட இவன் போகும் அவளையே பார்த்து விட்டு ரொம்ப ஓவரா போறா இருடி உன்ன பாத்துகிறேன் என்று கூறி அங்கு சென்று ஷாம் அருகில் போய் நிற்க்க ஷாமும் அவனை பார்த்து முகத்தை திருப்பி கொள்ள ஷ்ரவன் ஏ என்னடா அவகிட்ட போனா அவ மூஞ்சிய திருபுரா ஓங்கிட்ட வந்தா நீயும் மூஞ்சிய திருப்புற என்னடா நினைச்சிக்கிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும் என்று கேட்க
அவன் கூறியது தமிழ் காதில் விழ அவர்களிடம் திரும்பிய தமிழ் அண்ணா அவர்கிட்ட யாரும் இங்க பேசதயாரா இல்ல எப்போ பாரு ஆஃபீஸ் கட்டிக்கிட்டே அலையூராறு அதையே கட்டிக்கிட்டு அழ சொல்லுங்க என்று கூறி முகத்தை திருப்ப
ஷாம் ஷ்ரவனிடம் ஏண்டா இப்டி பன்ற அங்க பாரு எல்லாரும் ஜோடியா அவங்க மனைவிக்கு பாத்து பாத்து செலெக்ட் பண்றாங்க நீ பாட்டுக்கு ஆஃபீஸ் போய்ட்ட அவ எப்டி ஃபீல் பண்ணுவான்னு கொஞ்சமாச்சும் நெனச்சு பாத்தியா பாவம் டா அவ போ டா அவக்கிட்ட போ என்று கூற
ஷ்ரவன் அவளின் முகத்தை பார்க்க அவளின் பார்வையில் சோகம் நிறைந்து புடவையை பார்க்க விருப்பம் இல்லாமல் பார்த்து கொண்டு இருந்தாள்.
ஷ்ரவன் அவள் அருகில் சென்று அமர அவனை கண்டுகொள்ளாமல் முகத்தை சிறு குழந்தையை போல் முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள ஷ்ரவனுக்கு அவளின் முக பாவணையில் சிரிப்பு வர சிரித்து கொண்டே அவளை நெருங்கி இடித்த வாரே அமர்ந்து தள்ளுடி நானே ஒனக்கு செலெக்ட் பண்றேன் என்று கூறி புடவையை பார்க்க ஆரம்பிக்க தமிழ் தன்னவன் தனக்கு எடுத்து கொடுக்கும் முதல் புடவை என்று மனம் மகிழ்ந்தாலும் வெளியில் கோபமாக இருப்பது போல் வைத்து கொண்டு இருக்க ஷ்ரவன் அலசி ஆராய்ந்து லாவன்டர் கலரில் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த கற்கள் பதித்த பட்டு புடவை ஒன்றை எடுத்து தமிழிடம் கொடுக்க தமிழின் கண்கள் ஆச்சரியாத்தில் விரிந்து பரவாயில்ல நம்ம ஆளு சூப்பர் ரா தான் செலெக்ட் பண்ணிருகாரு என்று பெருமைபட்டு கொண்டு இருக்க