மெல்ல மெல்ல இருளை விளக்கி தன் அன்றாட வேலையை செய்ய வந்தது சூரியன்.
தமிழ் எழுந்திரிடி இன்னும் தூங்கிட்டு இருக்க ,நிவி.
நிவி please கொஞ்ச நேரம் என்று கண்களை திறக்காமலே திரும்பி படுத்து மறுபடியும் தன் உறக்கத்தை தொடர்ந்தாள்.
சரிடி ஆனா ரொம்ப நேரம் தூங்காத அம்மா அப்போவே நீ எழுந்துடையனு கேட்காங்க சீக்கிரம் எழுதிருச்சு வா நா கீழ போறேன் என்று கூறி நிவி சென்று விட
அவள் சென்று அரைமணி நேரம் கழித்து தன் துயில் கலைந்து எழுந்து சென்று குளித்து முடித்து விட்டு சுடி ஒன்றை அணிந்து கொண்டு கீழே வர
தமிழ் இவ்ளோ நேரமா தூங்குவ, தனம்.விடு தனம் சின்ன பொண்ணு தான, ராஜாராம்
என்னது சின்ன பொண்ணா அவளுக்கு நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டு சின்ன பொண்ணா சின்ன பொண்ணு என்று தனது மகளையும் ,கணவரையும் திட்டிக்கொண்டு இருக்க
எதுக்கு தனம் ஏ மருமகள திட்டுற, மகா.
நீங்க எல்லாரும் அவளுக்கு இப்டி சப்போர்ட் பண்ணியே அவள கெடுக்ககுறீங்க என்று கூறி தனது வேலைகளை செய்ய ஆரம்பித்தார்.
தேங்க்ஸ் என்று கூறி அத்த என்ன தனத்து கிட்ட இருந்து என்ன காப்பாத்திடீங்க என்று கூறி மகாவை அணைத்து கொள்ள அவளின் தலையை வருடி புன்னகையுடன் அவளை அணைத்து கொண்டார்.
அத்த நா கொஞ்சம் வெளிய போய்ட்டு வந்துறேன் என்று கூறி விட்டு வெளியே சென்றுவிட்டாள்.
வெளியே சென்று ரம்யமான அந்த காலை பொழுதை அனுபவித்த படி நிவியும் அவளும் நடந்து கோவிலுக்கு சென்றனர்.
கோவிலுக்கு சென்று திரும்பி வரும்போது ஏ தமிழ் ஷ்ரவன் அண்ணா எப்போ வருவாங்க,
தெரியல நிவி இன்னைக்கு நைட் வருவாறுன்னு நினைக்கிறேன் என்று கூறி வீட்டிற்கு வந்தனர்.மதுவும் ரித்விக்கும் சண்டை போட்டு கொண்டு இருக்க இவர்கள் சண்டையிடுவதை அனைவரும் பார்த்து தலையில் கைவைத்து அமர்ந்து கொண்டு இருந்தனர்.
