ரித்வின் மதுவின் இதழில் இதழ் பதித்து விலகி நா யாருக்கும் ஒன்ன விட்டு தரமாட்டேன்னு சொல்லி இறுக அணைத்து கொண்டு இருக்க அனைவரும் அதிர்ந்து அவர்களை பார்த்து கொண்டு இருந்தனர். முதலில் தன் நிலைக்கு வந்த ஷாலினி தலையை சிலுப்பி கொண்டு மற்றவர்களை பார்க்க மற்ற அனைவரும் வாயை திறந்து கொண்டு பே வென அவர்களை பார்க்க ஷாலினி தலையில் அடித்து கொண்டு அய்யோ எல்லாருக்கும் வேப்பிலை தான் அடிக்கன்னும் போல என்று கூறி விட்டு மறுபடியும் ரித்வின் மதுவை பார்க்க அவர்களும் அதே போஸில் இருக்க இவன் வேற இன்னும் அதே போஸ்ல இருக்கனே இந்தா வாரேன் இருடா என்று கூறி அவர்கள் அருகில் சென்று அவன் முதுகில் ஒரு அடி வைத்து டேய் அண்ணா என்ன டா பன்ற அவங்கள விடுடா என்று கேட்க்க
முடியாது நா விட மாட்டேன் இவ எனக்கு மட்டும் தான் என்று கூறி மேலும் இறுக்கி அணைக்க அய்ய்யோ இவன் வேற என்று கூறி மற்றவர்களை பார்க்க அவர்களோ பெரியவர்களோ சிறுபுன்னகையுடன் நிச்சயத்தார்த்தத்திற்கு தேவையானதை கவனிக்க ஷாம் நிவியை பார்த்து கன்னடிக்க நிவி வெட்க புன்னகையுடன் தன் தாயின் பின் ஒளிந்து கொள்ள ஷாம் அவளை பார்த்து சிரித்து விட்டு சிறுவர்களிடம் டேய் போய் தேவையானத எடுத்து வைங்கடா என்று கூற
ரோஷன் ஆமா என்னமோ நம்ம மட்டும் பாக்குற மாறி இவனும் தான பார்த்தான் என்று தன் தமையனை முணுமுணுக்க
டேய் தம்பி நீ சொல்லுறது ஏ காதுல விழுகுது என்று கூற
ரோஷன் ம்ம் விலட்டும்னு தான சொல்லறதே என்று கூறிவிட்டு திரும்ப அங்கு நீல நிற தாவனியில் ரதி தாம்பூல தட்டை எடுத்து வைத்து கொண்டு இருக்க ரித்வின் வருவதற்கு இரண்டு நிமிடத்திற்கு முன்பு தான் வந்ததால் அவன் சரியாக யாரையும் பார்க்க முடியவில்லை.
இப்பொழுது தான் ரதியை பார்க்க நீல நிற தாவனியில் தன் இடை வரை இருந்த கூந்தலை தளர பின்னி அதில் மல்லிகை பூ சூடி நெற்றியில் புருவங்களுக்கு இடையே வெள்ளை நிற கல் பொட்டோன்றை வைத்து காதில் நீல நிற சிமிக்கி அணிந்து கழுத்தில் பெரிய ஆரம் ஒன்று அணிந்து ரதி பெயருக்கு ஏற்றாற்போல் ரதி போல் மின்னி கொண்டு இருந்தாள்.