மறுநாள் காலை அழகாக விடிய ஷ்ரவனுக்கு முதலிலையே முழிப்பு வர தன் அருகில் இருந்தவளை பார்த்து விட்டு எழுந்து குளிக்க தனது உடைகளை எடுத்து கொண்டு குளியலறைக்குள் சென்று குளித்துவிட்டு வெளிய வர இன்னும் தூங்கி கொண்டு இருந்தலை பார்த்து கோபமாக அவள் அருகில் சென்று அவளை எழுப்ப எண்ணி அவள் முகம் பார்க்க அவள் இரவில் அழுதால் என்பதை அவள் முகம் காட்டி கொடுக்க பின் சிறிது நேரம் அவள் முகத்தை பார்த்து கொண்டு இருந்துவிட்டு ஏதும் செய்யாமல் கீழே சென்றான்.
அனைவரும் அங்கு அமர்திருக்க இவனும் அங்கு சென்று அமர தனம் அவனுக்கு காபி கொண்டு வந்து கொடுக்க சிறுபுன்னகையுடன் அதை எடுத்து கொண்டு தேங்ஸ் அத்த என்று கூற அவர் சிறுமிருவலுடன் அங்கிருந்து சென்றார்.
அப்பா எனக்கு முக்கியமான வேல இருக்கு நாம இங்கிருந்து இன்னைக்கே கிளம்பனும் என்று கூற
டேய் என்னடா இப்டி சொல்லுற ,ராஜேந்திரன்.
புரிஞ்சுக்கோங்க பா நாளைக்கு எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு என்று சரண் கூற
சரிடா ஈவினிங் கிளம்பலாம் அதுக்குள்ள நீயும் தமிழும் சேர்ந்து கோவிலுக்கு போய்ட்டு வந்துருங்க ம்ம் சரி பா என்று கூறி காபியை குடிக்க ஆரம்பித்தான்.
சீத்தா, டேய் தமிழ் எங்க என்று கேட்க
அவ தூங்குறா மா என்று கூற பெரியவர்கள் அனைவரும் சந்தோஷமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க சீத்தா தான் பாவம் நைட் அவள எப்டி பேசி கஷ்டப்படுத்துனானோ என்று உள்ளுக்குள் பயந்து கொண்டு இருந்தார்.
அவன் சென்று சிறிது நேரம் கழித்து தமிழ் கண் முழித்து தமிழ் அருகில் பார்க்க ஷ்ரவன் இல்லாததை உணர்ந்து குளியலறைக்குள் சென்று குளித்து முடித்துவிட்டு அடர் நீல நிறத்தில் பூக்கள் போட்டு அதில் கற்கள் பதித்த ஃபேன்ஸி புடவையை நேர்த்தியாக கட்டி இடைக்கு கீழ் வரை நீண்டிருந்த கூந்தலை தளர பின்னி,ஆயிரம் கதை பேசும் கண்களுக்கு சிறிது மை தீட்டி, இரு புருவங்கள் இடையே சிறு பொட்டு ஒன்றை வைத்துவிட்டு உச்சி வகிட்டில் திருமணம் ஆனா பெண்கள் மட்டும் வைக்கும் உரிமை உள்ள குங்குமத்தை எடுத்து வைத்துவிட்டு கழுத்தில் தன்னவன் அணிவித்த தாலி அதனுடன் மெல்லிய இரண்டு செயின் அணிந்து கொண்டு கீழே வர