என் இனிய மணாளனே-32

1.8K 74 13
                                    

மறுநாள் காலையில் முதலில் எழுந்த தமிழ் தன் அருகில் உறங்கி கொண்டிருந்த ஷ்ரவனை பார்த்த தமிழ் காலம் முழுக்க உன்ன இப்டியே பாத்துக்கிட்ட இருந்தாலே போதும் மாமா ஆனா இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு தான உனக்கும் எனக்கும் டிவோர்ஸ் ஆனதுக்கு அப்றம் இப்டிலாம் உன்ன நா பக்கத்துல இருந்து பாக்க முடியாதுல்ல மாமா நா போனதுக்கு அப்றம் நீ என்ன மறந்துருவியா மாமா நா அன்னைக்கு கேட்டதால தான நீ ஏங்கிட்ட இப்டி சிரிச்சு பேசுற இது கொஞ்ச நாள் தான்னு மூளைக்கு புரிஞ்சாலும் ஆனா ஏ மனசு அத ஏத்துக்க மாட்டிக்குது மாமா நா ஏதாச்சும் சொல்ல வேண்டும் போய் இப்ப இருக்க இந்த சந்தோசத்த என்னால கெடுத்துக்க முடியாது மாமா இப்ப நீ ஏங்கிட்ட இப்டி நடத்துகிறத நெனச்சிக்கிட்டே என்னோட வாழ்க்க முழுசும் வாழ்ந்துருவேன் மாமா i love you சித்து மாமா என்று கண்களில் கண்ணீருடன் நினைத்து கொண்டு தன் உடைகளை எடுத்து கொண்டு குளியலறைக்குள் சென்று குளித்து விட்டு ரெடியாகி கீழே சென்றாள்.

நாட்கள் அதன் போக்கில் நகற ஷ்ரவன் வேலை அதிகமாகிய காரணத்தால் காலையில் வேகமாக சென்று விட்டு இரவு லேட் ஆக வருவதையே வழக்கமாக வைத்திருந்தான்.

ஒருநாள் ஷ்ரவன் ஆஃபீஸிற்கு லேட் ஆனதால் வேகமாக ஆஃபீஸிற்கு கிளம்பி கீழே வர அங்கு ஸோபாவில் அனைவரும் அமர்ந்து இருக்க

சீத்தா டேய் ஷ்ரவன் என்னடா இவ்ளோ வேகமா போற என்று கேட்க

இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங்கு இருக்கு மா அதான் என்று கூற

தமிழ், மாமா சாப்பிட்டு போங்க

ஷ்ரவன், வேணாம் டைம் ஆச்சு

தமிழ், பரவாயில்ல மாமா 10 நிமிஷத்தில ஒன்னும் ஆகிறாது சாப்பிட்டு போங்க நா எடுத்து வைக்கிறேன் என்று கூறி எழ

ஷ்ரவன் அதெல்லாம் ஒன்னும் வேணாம் டைம் இல்லன்னு சொன்னா ஒனக்கு புரியாதா ஒருவேள சாப்பிடலன்னா நா ஒன்னும் செத்து போயிற மாட்டேன் சும்மா சும்மா ஏதாச்சும் நொய் நொய் ன்னு மனுஷன டென்சன் பண்ணாத போ  அங்குட்டு என்று கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று கூட தெரியாமல் ஆஃபீஸிற்கு சென்று விட்டான்.

என் இனிய மணாளனே!!Where stories live. Discover now