மறுநாள் காலையில் தாமதமாக எழுந்த ஷர்மி ஐய்யோ இன்னைக்கு காலேஜிக்கு லேட் ஆச்சி பஸ் வேற போயிருக்கும் என்ன பண்ண என்று சிறிது யோசித்து விட்டு சரி இன்னைக்கு ஒரு நாள் ஸ்கூட்டில போலாம் என்று ஸ்கூட்டியில் கல்லூரி சென்றால் வேகமாக வண்டியை நிறுத்தி விட்டு தனது பைக் ஐ எடுத்து கொண்டு கிளாஸை நோக்கி ஓடினாள்.
ஓடியவள் யார் வருகிறார்கள் என்று கூட காணாது சென்றவல் எதிரே யார் மீதோ மோதி கீழே விழ போக அவளை ஒரு கரம் தாங்கியது கீழே விலப்போகிறோம் என்று பயத்தில் கண்களை மூடி கொள்ள தன்னை விலாமல் தாங்கியத்தில் யாரென்று பார்க்க கண்களை திறந்து பார்த்தாள்.
அங்கோ அவளுடைய நாயகன் சிறுபுன்னகையுடன் அவளை இடையில் கைகொடுத்து தாங்கி இருந்தான்.
அவள் அதிர்ச்சியுடன் விழிவிரிய அவனை பார்க்க அந்த அழகிய விழியில் தன்னை மறந்து அவள் கண்களை ஷ்ரவன் பார்க்க அவளும் அவன் கண்ணை தான் பார்த்து கொண்டு இருந்தாள்.
இருவரும் தன்னை மறந்த நிலையில் இருக்க கல்லூரியில் மணி அடித்ததில் இருவரும் தங்கள் நிலையை உணர்ந்து விலகி நின்றனர்.
ஷ்ரவன், ஏ எதுக்கு இவ்ளோ அவசரம் பாத்து போ மாட்டியா
இவ்ளோ நாட்கள் அவனிடம் வம்பு வளர்த்தவள் இன்று அவன் ஸ்பரிசம் அவள் மீது பட்டதில் அவள் முகத்தில் வெட்கம் வந்து ஒட்டி கொள்ள நாணத்தில் தலைகுனிந்து இருந்தவள் அவன் கேள்வி கேட்கவும் அ...அது வந்து கிளாஸ்க்கு டைம் ஆச்சி அதான் என்று திக்கி திணறி குனிந்த வாரே சொல்ல சரி பாத்து போ என்று அவன் கூறி அடுத்த நொடி அங்கிருந்து ஓடினால் அவள் அப்படி ஓடுவதை பார்த்து புன்னகையுடன் மனதில் எப்போ பாரு விடாம பேசுவா இப்போ என்னடான்னா இந்த ஓட்டம் ஓடுறா என்று நினைத்து கொண்டு இருக்கும் போது அவளின் கண்கள் நியாபகம் வர சம்திங் இஸ் ஸ்பெசல் என்று அங்கிருந்து நகர்ந்தான்.
கிளாஸிற்கு வந்த ஷர்மி தனது இடத்தில் அமர்ந்து மூச்சை இழுத்து விட்டு அவளை நிலைப்படுத்தி கொண்டாவள் அவன் அணைப்பில் இருந்தது அவள் நினைவில் வந்து வந்து போக தனி உலகில் சஞ்சரித்து கொண்டு இருந்தாள்.