என் இனிய மணாளனே-38

1.8K 66 30
                                    

மறுநாள் காலையில் மது எழுந்து அறையில் இருந்து வெளியேறி அம்மா காபி என்று கூறி கொண்டு சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

தனம் ,அடியே குளிக்காம கொள்ளாம சமையல்கட்டுக்கு வரக்கூடாதுன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன் நீ திருந்தவே மாட்டியா என்று கூறி அவளை அதட்ட

அடப்போமா நீ வேற எப்போ பாரு இந்த ஒரே டயலாக் சொல்லிட்டே இருக்க நா இன்னும் ஓங்கிட்ட இருந்து நெறைய எதிர் பாக்குறேன் என்று கண்களை உருட்டி சொல்லிவிட்டு சரி அத விடு இப்போ எனக்கு காபி குடு மா என்று கூற

தனம், ஏன்டி இன்னும் சின்ன புள்ளனு நெனப்பா first பல்ல வெலக்கிட்டு வா அப்போ தான் தருவேன் என்று கூற

அடப்போ மா பல்லு வெலக்காம குடிச்சு பாரு அதோட டேஸ்ட்டே தனி என்று குழந்தை போல் முகத்தை வைத்து கொண்டு கூற

அவள் கூறிய முக பாவனையை பார்த்து சிரித்த தனம் ஆமா இத போய் வெளிய சொல்லி பாரு எல்லாம் சிரிப்பாங்க என்று கூறி அவள் கையில் காபியை கொடுத்து விட்டு நாளைக்கு கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா என்று கூற

மது காஃபியை குடித்து கொண்டே ம்மா அதுக்கு இப்போ என்ன அவசரம் நான்தான் ரெண்டு வருஷம் போகட்டும்னு சொன்னேன்ல என்று கூற

தனம் இதுவரைக்கும் நீ சொல்லுறத கேட்டாது போதும் இப்போ ஒனக்கு ஒரு நல்ல சம்மந்தம் வந்துருக்கு அப்பாவும் பேசலாம்னு சொல்லிருக்காரு எல்லாம் சரியா நடந்துச்சு வர்ற முகூர்த்ததுல கல்யாணம் வச்சிடலாம் என்று கூறி விட்டு சமையல் அறையில் இருந்து வெளியேற மது அதிர்ந்து சிலையென நின்றிருந்தாள்.

சிறிது நேரத்தில் தன் நிலை உணர்ந்து வேகமாக தனது அறைக்குள் சென்று தன் மொபைலை எடுத்து ரித்துவிற்கு அழைத்தாள்.

எவ்வளவு முயன்றும் அவனை தொடர்புகொள்ள முடியவில்லை கண்களில் கண்ணீருடன் அய்யோ கடவுளே இப்போ நா என்ன பண்ணுவேன் ரித்து ப்ளீஸ் ரித்து சீக்கிரம் வா ரித்து அம்மா வேற என்னென்னமோ சொல்லுறாங்க  எனக்கு பயமா இருக்கு என்று கூறி அழுதாள்.

என் இனிய மணாளனே!!Donde viven las historias. Descúbrelo ahora