வீட்டிற்கு வந்த தமிழ் அவள் அறைக்கு நுழையும் போது மா தமிழ் வந்து டா, மதுமதி என்கிற மது.
எதுக்குடி இப்டி என்ன ஏலம் விட்டுற எரும,தமிழ்.
ம்ம் அம்மா தான் நீ வந்ததும் என்ன அவங்கள கூப்பிட சொன்னாங்க, மது.
தமிழ் வந்துடையா ட்ரெஸ் மாத்திட்டு வா அப்பா வந்திருவாறு உன்கிட்ட ஏதோ கல்யாணத்த பத்தி பேசனும்னு சொன்னாரு, சிவகாமி.
ம்ம் ஓகே மா என்று உடை மாற்றி அறையில் இருந்து வெளியில் வர சோபாவில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டு இருந்தார்.
தமிழை பார்த்து புன்னகையுடன் தமிழ்மா இங்க வாடா என்றார்,ராஜாராம்.
சிறு புன்னகையுடன் அவர் அருகில் அமர்ந்து கொண்டாள், தமிழ்.
அவள் தலையை வருடி கல்யாணத்தை பத்தி என்னடா முடிவு பண்ணிருக்க என்றார்.
நீங்க என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு ஓகே தான் பா, தமிழ்.
இல்லடா உனக்கு னு ஆச ஏதாச்சும் இருக்கும் ல என்றார்.
சின்ன வயசுல இருந்து எனக்கு தேவையான எல்லாத்தையும் நீங்க தான பா பார்த்து பார்த்து செஞ்சிங்க இத மட்டும் தப்பாவா பண்ண போறீங்க சோ நீங்க என்ன முடிவு பண்ணாலும் எனக்கு சம்மதம் பா என்று அவர் மடியில் தலை வைத்து படுக்க அறையில் இருந்து வெளியில் வந்த மது நீ எதுக்கு அப்பா மடில்ல படுத்திருக்க நான் தான் படுப்பேன் நீ எழுந்திரி என்று தமிழ் ளுடன் சண்டையிட போடி நா அப்டி தான் படுப்பேன் என நோ நான் தான் என இருவரும் சண்டை போட இப்போ ரெண்டு பேரும் அமைதியா வந்து சாப்பிடுங்க என்றார் தனலட்சுமி.
மூவரும் சாப்பிட அமர தனலட்சுமி பரிமாறினர்.
தமிழினியா வீட்டில் அப்பா ராஜாராம் சொத்திற்கு எந்த பஞ்சமும் இல்லாத அளவிற்கு செல்வம் மிக்கவர் இருந்தாலும் நிலம், விவசாயம் என்று தன்னால் முடிந்த வரை அயராது உழைப்பவர், அம்மா தனலட்சுமி, தங்கை மதுமதி பி.காம் பைனல் இயர்,தம்பி பிரவீன் டுவேல்த் ஹோஸ்டெல் ல தங்கி படிக்கிறான்.
சாப்பிட்டு முடித்ததும் தாயிற்கு உதவி விட்டு அறைக்குள் செல்ல போக்கும் நேரம் தமிழ் இங்க வாடா என்றார் ராஜாராம்.
என்ன பா, தமிழ்.
இதுல மாமா போட்டோ இருக்கு என்று அவளிடம் ஒரு கவரை கொடுத்தார்.
அதை வாங்கி கொண்டு அறைக்குள் வந்து படுக்கையில் விழுந்தாள்.
கவரில் இருந்து போட்டோ எடுத்து பார்த்தால் ம்ம் நல்லா தான் இருக்கான் என்று மீண்டும் போட்டோவை வைத்து விட்டு உறங்கினாள்.
டேய் இப்போ என்னங்குற,சீத்தா.
மா என்னால அவள கல்யாணம் பண்ணிக்க முடியாது அவளுக்கு அப்போவே அவ்ளோ திமிரு இப்பவும் அப்டி தான் இருப்பா எனக்கு அவள புடிக்காது, ஷ்ரவன்சித்தார்த்.
எனக்கு தெரியாது அவள தான் நீ கல்யாணம் பண்ணிக்கனும் இல்ல என்ன உயரோடவே பாக்க முடியாது என்றார், சீத்தா.
மா எதுக்கு இப்டி பேசறீங்க,ஷ்ரவன்.
எனக்கு இப்போ வே முடிவு தெரியணும், சீத்தா.
சரி என்னமோ பண்ணிதொலைங்க அப்றம் பின்னாடி வருத்தபட்டா நா ஒன்னும் பண்ண முடியாது என்று கூறி தனது அறைக்குள் சென்றான்.
என்ன சீத்தா இப்டி பண்ணிட்ட ஒருத்தவங்கள கட்டாய படுத்தி கல்யாணம் பண்ணி வச்சா அவங்க எப்டி சந்தோஷமா இருபாங்க,ராஜேந்திரன்.
இப்போ விட்டா அவன் சன்யாசியாத்தான் ஆவான் இவள மட்டும் இல்ல எந்த பொண்ண காமிச்சாலும் அவள நெனச்சுக்கிட்டு இவன் கல்யாணமே பண்ண மாட்டான்,சீத்தா.
அதுக்கு இப்டி பண்ணா அவனும் சந்தோசம் இல்லாம அந்த பொண்ணையும் கஷ்ட பட்டுத்துன என்ன பண்ணுவ,ராஜேந்திரன்.
அவன் அப்டி பண்ண மாட்டான் நா நம்ம தமிழ் கிட்ட எல்லா உண்மையும் சொல்லி தான் அவ. சரின்னு சொன்ன மட்டும் தான் இந்த கல்யாணம் என்று கூறி சமையல் அறைக்குள் சென்றார்.
ஷ்ரவன் வீட்டில் அப்பா ராஜேந்திரன் பிஸ்னஸ் மேன்,அம்மா சீத்தா,தம்பி ரித்விக் எம்.பி.ஏ பைனல் இயர், தங்கை ஷாலினி பிளஸ் ஒன்.