இரவெல்லாம் சுற்றி திரிந்து விடியற்காலையில் வீடு வந்து சேர்ந்தான் ஷ்ரவன்.
வந்ததும் குளியலறைக்குள் சென்று குளித்துவிட்டு ஆஃபீஸிற்கு கிளம்பி கொண்டு இருந்தான்,இரவு லேட்டா ஆக துங்கியதால் தாமதமாக கண்விழித்தால் தமிழ்.
ஷ்ரவன் கண்ணாடி வழியாக தமிழ் விழித்ததை பார்த்து அவளை கண்டு கொள்ளாமல் அறையை விட்டு வெளியேறினான்,தமிழ் அவன் போவதையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள்.
அதற்கு பின் ஷ்ரவன் தமிழ் இருவரும் சரியாக பேசிக்கொள்ள கூட இல்லை.
இப்படியே இரண்டு வாரங்கள் சென்றன.இரவு வீட்டில் ஷ்ரவனை தவிர மற்ற அனைவரும் இருந்தன.
ஷாலினி, சரி அண்ணி நீங்க அண்ணாவுக்கு என்ன gift தரப்போறீங்க.
தமிழ், அவருக்கு எதுக்கு gift என்று தமிழ் புரியாமல் கேட்க
ரித்விக்,சரியா போச்சி போங்க ரெண்டு நாள்ல பிப்ரவரி 14 ஒங்க ஆளுக்கு நீங்க gift தரவேணாமா
ஓஹ் நா மறந்துட்டேன் டா ஆனா ஒன்னு நா கொடுக்க போற gift அவரு என்னைக்குமே மறக்கவே மாட்டாரு என்றால் அனைவரும் முன்பும் சிரித்து கொண்டவள் மனதில் கண்டிப்பா மாமா நா தாரா gift ல நீ சந்தோஷமா இருப்ப என்று எண்ணி கொண்டாள் அனைவரிடமும் கூறிவிட்டு தனது அறைக்கு செல்ல பெரியவர்களும் அவர்கள் அறைக்கு சென்றனர்.
ஷாலு ரித்வி அருகில் வந்து டேய் நீ இந்த வருசமாச்சும் கமிட் ஆவியா இல்ல எப்போவும் போல single தான என்று நக்கலாக கேட்க
ரித்விக், first நீ ஒன்னோட வயசுக்கு தகுந்தமாறி பேசுடி பேச்ச பாரு என்று அவள் தலையில் கொட்டிவிட்டு போக ,ஷாலினி தலையை தேய்த்து கொண்டே போ டா லூசு என்னையே கொட்டி வச்சுட்டேல ஒனக்கு லவ் யே செட் ஆகாது போடா எரும என்று கூற போடி போ ஐயா பின்னாடி எத்தன பொண்ணுங்க சுத்துது தெரியுமா என்னோட ரெஞ் தெரியாம பேசாத
ஆமா ஆமா பாத்தேனே நீ மது அண்ணி பின்னாடி போனியே என்று கூற
ரித்விக் அதிர்ச்சியாகி ஷாலுவை பார்க்க அவள் சிரிப்புடன் என்னடா திருட்டு முழி முழிக்க ஏ நீ எப்போ பாத்த ,ரித்விக்
