என் இனிய மணாளனே-33

2.1K 83 33
                                    

தமிழ் வீட்டிற்குள் நுழைந்ததும் அவள ஸோபாவில் அமர வைத்து விட்டு அவள் அருகில் அமர்ந்த தனம் என்ன நீ மட்டும் வந்துருக்க எதுவும் பிரச்சினை இல்லையே என்று பதற

தமிழ் புன்னகைத்த படியே அம்மா ரிலாக்ஸ் ஒன்னும் இல்ல எனக்கு உங்கள எல்லாம் பாக்கணும் போல இருந்திச்சு அதான் வந்தேன் ஏ நா வரக்கூடாதா என்று கேட்க

தனம் ஏ நா எப்ப டி அப்டி சொன்னேன் நீ திடீர்னு வந்து நிக்கவும் நா பயந்துட்டேன் அதான் டி சரி இரு நா போய் காபி எடுத்துட்டு வாறேன் என்று கூற

தமிழ், இல்லம்மா எனக்கு டையர்ட்டா இருக்கு நா போய் ரெஸ்ட் எடுக்குறேன் என்று கூற

தனம் ம்ம் சரி நீ போய் ரெஸ்ட் எடு நா போய் சமைக்கிறேன் என்று கூற

தமிழ் தன் அறைக்கு சென்று குளித்து விட்டு வந்து கட்டிலில் அமர்ந்தவள் தன் அருகில் உள்ள ட்ராவில் இருந்த தன்னவன் போட்டோவை எடுத்து அதில் இதழ் பத்தி இப்போ நீ என்னோட தொல்ல இல்லாம சந்தோஷமா இருப்பெல மாமா என்னைக்குமே எனக்கு உன்னோட சந்தோஷம் தான் முக்கியம் மாமா என்று கூறி கண்களில் கண்ணீருடன் அதனை பார்த்து கொண்டே உறங்கியும் போனாள்.

இரவு 7 மணிக்கு ஷ்ரவன் புன்னகையுடன் வீட்டிற்கு வர சீத்தா வா டா என்ன அதிசயம் இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட என்று கேட்க

ஷ்ரவன் ஆமா ம்மா இவ்ளோ நாள் ஒரு important ஒர்க்ல மாட்டிக்கிட்டேன் இப்போ அது எல்லாம் முடிஞ்சிருச்சி அதான் என்று புன்னகையுடன் கூற

சீத்தா குளிச்சிட்டு வாடா சாப்பிடலாம் என்று கூற

ஷ்ரவன் ம்ம்ம் சரி மா என்று கூறி தனது அறைக்கு சென்று குளித்து விட்டு கீழே வர அனைவரும் அமர்ந்து இருக்க ஷ்ரவன் அமர சீத்தா பரிமாறினார்.

ஷ்ரவன் கண்கள் மட்டும் தன்னவளை தேடியது அவன் தேடலின் பலன் கிடைக்காமல் போக இறுதியில் தன் தாயிடமே கேட்க அம்மா இனியா எங்க என்று கேட்க

அனைவரும் ஒரு சேர புரியாமல் முழிக்க ரித்வி டேய் அண்ணா இனியா வா அது யாருடா என்று புரியாமல் கேட்க அதே கேள்வி தான் என்று அனைவரும் ஒரே மாதிரி புரியாமல் ஷ்ரவனை பார்க்க

என் இனிய மணாளனே!!Where stories live. Discover now