ஒரு மாதம் கழித்து....
ஒரு பிரம்மாண்டமான திருமண மண்டபத்தில் ரித்வின் வெட்ஸ் மதுமதி என்று பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
அனைவரும் பம்பரமாய் சுழன்று வேலை செய்து கொண்டு இருக்க ரோஷனோ ரதியின் பின்னே சுற்றி கொண்டு இருந்தான்.
ஆனால் அவளோ அவனை கண்டு கொள்ளாமல் இருந்தாள்.
ராஜேஸ்வரி ரதியிடம் வந்து ரதி அந்த ரூம்ல அம்மாவோட மொபைல் இருக்கு அத எடுத்துட்டு வா என்று கூற
ரதி, ம்ம் சரி மா என்று அந்த அறைக்குள் சென்றாள்.அவளின் பின்னே ரோஷனும் சென்று கதவை பூட்டி விட்டு திரும்ப அங்கு ரதி புன்னகையுடன் கைகளை கட்டி கொண்டு சுவற்றில் சாய்ந்து நின்றுகொண்டு இருக்க அதனை பார்த்த ரோஷன் புன்னகையுடன் அவள் அருகில் சென்று ஏ என்னடி நானும் காலைல இருந்து பாத்துகிட்டே இருக்கேன் நீ என்ன கண்டுக்கவே மாட்டிக்கிற என்று கேட்க
ரதி, ம்ம் போ டா நீ மட்டும் என்ன நேத்து கண்டுகிட்டையா என்ன என்று கூற
ரோஷன், யே நேத்து நெறைய வேலை டி இல்லனா நா போய் ஏ செல்லகுட்டிய கண்டுக்காம இருப்பேனா என்று கூறி மேலும் அவளை நெருங்க ரதி புன்னகையுடன் அவன் நெஞ்சில் கை வைத்து அவனை கட்டிலில் தள்ளி விட அவனோ அவன் நெஞ்சில் பதிந்திருந்த அவள் கையை பற்றி இழுத்து அவளை தன்னோட சேர்த்து அணைத்து கொண்டு கட்டிலில் விழுந்தான்.
ரோஷன் கீழே இருக்க ரதி அவன் மேலே இருந்தாள்.
ரதி பயத்தில் அவன் சட்டையை இறுக பற்றி கொண்டு அவனோடு ஒன்றி இருக்க அவளை கண்டு சிரித்து கொண்டு அவளை மேலும் இறுக்கி அணைக்க ரதி உடல் சிலிர்த்து கண்களை திறந்து பார்க்க அவன் கண்களில் காதலை தேக்கி அவனை பார்க்க ரோஷன் அவள் இடையில் கை வைத்து அவளை மேலும் தன்னோடு அணைத்து அவளை தனக்கு கீழே கொண்டு வந்து அவளை பார்க்க அவளும் அவன் கண்களை காதலுடன் நோக்க ரோஷன் அவள் இரு கண்களிலும் இதழ் பதிக்க அவளும் கண் மூடி அதனை ரசிக்க பின் அவள் இரு கன்னத்திலும் இதழ் பதித்து பின் அவள் இதழை சிறை செய்தான்.
