என் இனிய மணாளனே-27

1.8K 78 15
                                    

நிவி கண்களில் கண்ணீருடன் அனைவரையும் பார்க்க அதற்கு மேல் அவளை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று எண்ணி அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

நிவி எதுவும் புரியாது விழிக்க ரதி அவளிடம் வந்து அய்யோ ஏ செல்லம் எதுக்கு இப்போ அலுற நாங்க சும்மா விளையாடினோம் இந்த கல்யாணத்துல எங்க எல்லாருக்கும் சம்மதம் தான் ஷாம் மாமா தான் கொஞ்ச நேரம் கோவப்படுற மாறி நடிப்போம்னு சொன்னாரு என்று ரதி கூற நிவி ஷாமை முறைத்து விட்டு தன் தந்தையை அணைத்து கொண்டாள் .

என்னடா நீ ஒன்னோட ஆசைய மீறி நாங்க ஏதாச்சும் பண்ணுவோமா என்று கூற நிவி கண்ணீர் கலந்த சிரிப்புடன் love you அப்பா என்று கூற

ஓய் அத நீ என்ன பாத்து சொல்லனும் டி ,ஷாம்.

போ டா நீ என்ன அழ வச்சிட்டேல ஹ்ம்ம் என்று முகத்தை திருப்ப

ராஜேஸ்வரி, ஏ என்ன டி மாப்பிள்ளைய மரியாத இல்லாம பேசிக்கிட்டு மரியாதையா பேசுடி என்று அதட்ட

அட எதுக்கு அண்ணி ஏ மருமகள இப்போ திட்டுறீங்க அவள இவன அழ வச்சான்ல அவன விடாதா டா நிவி என்று மரகதவல்லி கூற

பாத்தியா ஏ மாமியார் எனக்கு சப்போர்ட் பண்றாங்க ஆனா நீ அவனுக்கு சப்போர்ட் பன்ற ராஜி முகத்தை சுழித்து விட்டு மரகதவல்லி அருகே சென்று அவரை அணைத்து கொண்டாள்.

அவளின் செயற்கையை பார்த்து அனைவரும் சிரிக்க ஷாம் அத்த மாமா நா நிவிய கூப்பிட்டு வெளிய போக பர்மிஷன் வேணும் என்று தயங்கி கேட்க

ராகுல் இதுக்கு எதுக்கு மச்சான் பர்மிஷன் தாராளமா கூப்பிட்டு போங்க என்று கூற

நிவி நா இவன் கூட எங்கையும் போக மாட்டேன் என்று சிறுபிள்ளை போல் முகத்தை தூக்கி வைத்து கொள்ள

அவளின் செயலில் சிரித்த ஷாம் பரவாயில்ல நா ரதிய கூப்பிட்டு போறேன் என்ன ரதி மா நம்ம போலாம்ல என்று ஷாம் ரதியிடம் திரும்பி கேட்க ம்ம் போலாம் மாமா என்று கூறிய அடுத்த நொடி அடப்பாவி அதுக்குள்ள கொழுந்தியாவ கரெக்ட் பண்ண ட்ரை பண்ட்ரியா பிச்சிடுவேன் ஒன்ன இரு டா என்று அவனை துரத்த அவள் கைகளில் சிக்காமல் வெளிய ஓடியவன் சீக்கிரம் கிளம்பி வாடி நா கார்ல wait பண்றேன் என்று கத்தி கொண்டு ஓடிவிட்டான்.

என் இனிய மணாளனே!!Where stories live. Discover now