தமிழ் குளித்து முடித்து தன்னை சமன் செய்து கொண்டு கிளம்பி கீழே சென்றாள்.
மனதில் வலியை மறைத்துவிட்டு சிரித்த முகத்துடன் இருந்தாள்.
ஷ்ரவனுக்கு அன்று எதிலும் மனம் ஈடுபடவில்லை.
மாலை 5.00 மணிக்கு வீட்டிற்கு வர சீத்தா ஹாலில் அமர்ந்து இருக்க அவன் கண்கள் தமிழை தான் தேடியது.
சீத்தாவின் அருகில் சென்று அவர் அருகில் அமர.
சீத்தா தனது அருகில் யாரோ அமர்வது தெரிந்து திரும்பி பார்க்க ஷ்ரவன் நிற்பது தெரிந்து ஆச்சரியமாக என்னடா இது அதிசயமா இருக்கு நீ இவ்ளோ சீக்கிரம் வர்ற ஆள் இல்லையே என்று வினவ
இல்லம்மா சீக்கிரமா வேலை முடிஞ்சிருச்சி அதான் என்று சீத்தாவிற்கு பதில் கூறினாலும் அவன் கண்கள் மட்டும் அவளை தேடி கொண்டு தான் இருந்தது.
அவன் கண்கள் அலைபாய்வதை பார்த்த சீத்தா என்னடா ஆச்சி உனக்கு என்னத்த தேடிக்கிட்டு இருக்க என்று கேட்க
ஒன்னும் இல்ல மா என்று கூறி விட்டு நா போய் fresh ஆகிட்டு வாறேன் என்று கூறிவிட்டு அறைக்கு சென்று தனது உடைகளை எடுத்து கொண்டு குளியலறைக்குள் செல்ல போக அப்பொழுது தான் தமிழ் குளித்து முடித்து விட்டு குளியல் அறையில் இருந்து வெளியில் வந்தாள்.
இதனை எதிர் பாராத இருவரும் சட்டென்று மோதிக்கொள்ள தடுமாறி தமிழ் கீழே விழ போக அவளை இடையில் கை கொடுத்து ஷ்ரவன் தாங்கி கொண்டான்.
இருவரும் ஒருவர் அருகாமையில் ஒருவர் மெய் மறந்து இருந்தனர்.
ஷ்ரவனின் கண்கள் அவனையும் மீறி தமிழை ரசிக்க தொடங்கியது.
பனியில் நனைந்த ரோஜா மலராய் முகத்தில் ஆங்காங்கே நீர் திவலைகள்,தடுமாறி கீழே விழ போகிறேன் என்ற பயத்தில் மருண்ட மான் விழிகள்,இயற்கையாகவே சிவந்திருந்த ரோஜா இதழ் நிற உதடுகள் என்று எந்தவித ஒப்பனைகளும் இன்றி முழு நிலவாய் அவள் முகம் தெரிய அதனை இமைக்காமல் அவளையே ரசித்து கொண்டு இருந்தான்.
