மறுநாள் காலையில் ஷ்ரவன் எப்பொழுதும் போல உடற்பயிற்சி செய்து விட்டு குளியலறைக்குள் சென்று குளித்து முடித்து வெளியே வர அப்பொழுதும் தமிழ் உறங்கி கொண்டு இருக்க அவள் அருகில் சென்று அவள் முகத்தை பார்க்க குழந்தை போல் உறங்கும் தன் மனையாளை பார்க்க அவள் முகத்தை பார்த்து கொண்டே இருக்க தோன்றியது அவனுக்கு கலைந்த முடிகள், உறங்கும் போதும் உதட்டில் இருக்கும் புன்னகை என்று அவளை ரசித்து கொண்டு இருந்தான்.
தமிழ் கண்களை திறக்காமலே கைகள் இரண்டையும் நீட்டி சோம்பல் முறித்து பின் மெதுவாக தன் கயல்விழிகளை திறக்க தன் எதிரில் புன்னகையுடன் நிற்க்கும் தன் மணாளனை பார்க்க திருத்திரு வென விழித்து எழுந்து அமர்ந்து ஒரு வேல நாமா கனவு ஏதும் காண்ட்ரொம்மா மாமா எப்பவும் நம்மல மொரச்சிக்கிட்டு தான இருக்கும் இப்டி அவரு சிரிக்கிறதெல்லாம் நம்ம கனவுல தான் நடக்கும் என்று வாய்விட்டு சொல்லி கொண்டே கண்களை கசக்கி விட்டு மீண்டும் பார்த்தாள்.
ஷ்ரவனோ அவளின் ஒவ்வொரு செய்கையிலும் பார்க்க பார்க்க அவனால் சிரிப்பை அடக்க முடியாமல் வாய் விட்டு சிரிக்க
தமிழ் அய்யோ அப்போ இது உண்மை தானா இருந்தாலும் இத நம்ப முடியலையே என்று எழுந்து சிரித்து கொண்டு இருந்த ஷ்ரவன் அருகில் சென்று அவன் கையில் கில்ல ஷ்ரவன் ஸ்ஸ்..... ஆ என்று கைகளை தேய்த்து கொண்டு ஏ எதுக்கு டி என்ன கில்லுன என்று கேட்க
அது இல்ல மாமா இதெல்லாம் உண்மையா இல்லையான்னு ஒரு டவுட் அதான் என்று கூற
அதுக்கு எதுக்கு டி என்ன கில்லுன இருடி உன்ன என்று கூறி அவளை கில்ல வர அதை பார்த்த தமிழ் எஸ்கேப் டி தமிழ் ஓடிரு என்று அறையில் இருந்து வெளியில் ஓட அவளை துரத்தி கொண்டே ஷ்ரவன் ஓடி வர தமிழ் வேகமாக படியில் இருந்து இறங்கி கீழே ஓட இவனும் அவள் பின்னே ஓடினான்.
இவர்கள் போட்ட சத்தத்தில் சோஃபாவில் அமர்ந்து இருந்த ரித்விக் எழுந்து நிற்க்க வேகமாக வந்த தமிழ் அவனை ஒரு தள்ளு தள்ளி விட்டு ஓட ரித்விக் அம்மா என்ற சத்தத்தோடு சோஃபாவிலே விழுந்தான்.
