என் இனிய மணாளனே-13

2.1K 73 4
                                    

ரிஷப்சன் நடந்து கொண்டு இருந்தது.

மது போன் பேசுவதற்கு ஹோட்டலில் இருந்து வெளியேறி அங்கு நேர்த்தியாகவும் அதே நேரம் அழகாகவும் அமைத்து இருந்த தோட்டத்திற்கு செல்ல அங்கு ரித்விக் தனியாக அமர்ந்திருப்பதை பார்த்து அவன் அருகே சென்றாள்.

ரித்வி ஏ தனியா உட்கார்ந்து இருக்க

சும்மா தான் என்று அவளை பார்க்காது வேறுப்புறம் திரும்பி கொண்டே சொன்னான்.

ஓ அப்டியா ஒன்னோட friend வருண் செம்மையா பேசுறாரு எனக்கு அவரை ரொம்ப புடிச்சிருக்கு என்று கூறியதுதான் தாமதம் ஏ ஒனக்கு அறிவே இல்லையா எவன் வந்து ஓங்கிட்ட வந்து பேசுனா இப்படித்தான் பல்ல பல்ல காட்டுவியா என்று கோபமாக

அவன் பேசியதில் சற்று அதிர்ந்தவள் அவன் கூறிய வார்த்தையை உணர்ந்து இங்க பாரு வார்த்தையை கொஞ்சம் பாத்து

என்னடி பாத்து பேசணும் அவன் கிட்ட என்ன பேச்சு வேண்டி இருக்கு ஒனக்கு ம்ம் சொல்லுடி அப்டியே சிரிச்சு சிரிச்சு பேசுற அப்டி என்ன பேசுன சொல்லுடி சொல்லு என்று கத்த

மது கோபமாக நா பேசுனத ஓங்கிட்ட ஏன் டா சொல்லனும் நா யாருக்கிட்ட வேணாலும் பேசுவேன் என்று கூறி அங்கிருந்து நகர போக அவள் கையை பிடித்து முறுக்கினான்.

அவன் முறுக்கியத்தில் கை வலி எடுக்க கண்கலங்க டேய் விடுடா வலிக்குது விடுடா please விடு என்று கூறி கொண்டு இருக்கும் போதே அஷ்வினி ரித்விக்கை தேடி அந்த பக்கம் வர ரித்விக் மாமா எங்க இருக்கிங்க மாமா அஷ்வினி வருவதை பார்த்து மதுவின் கையைவிட்டு விட்டு அவளை நோக்கி சென்றான்.

ரித்விக்கை பார்த்ததும் அஷ்வினி அவன் அருகில் வந்து மாமா நீ இங்க தான் இருக்கையா நா வந்ததுல இருந்து ஒன்ன தான் தேடிக்கிட்டு இருந்தேன்.

சிறுமிருவலுடன் எப்போ வந்த அஷ்,
நா வந்து ரொம்ப நேரம் ஆச்சு நீ இங்க என்ன பண்ற உள்ள போலாம் வா என்று கூறி அவனை அழைத்து செல்ல ரித்வி மதுவை திரும்பி பார்த்து கொண்டே அஷ்வினியுடன் சென்றான்.

என் இனிய மணாளனே!!Where stories live. Discover now