மறுநாள் காலையில் ஞாயிறு என்பதால் அனைவரும் தாமதமாக எழ ஆனால் சூரியன் மட்டும் தன் வேலையை தவறாது செய்ய வந்தது.எட்டு மணிக்கெல்லாம் ஷாம் கிளம்பி ஷர்மி வீட்டிற்கு வந்தான்.
ஷர்மி கருப்பு நிற சுடி ஒன்றை அணிந்து கொண்டு தன் அன்னையிடம் சொல்லி கொண்டு ஷாம் உடன் ஷ்ரவன் வீட்டிற்கு கிளம்பினர்.
போகும் வழி எல்லாம் ஷாம் ஷர்மி இடம்
ஷர்மி அவன் ஏங்கிட்ட பேசுவான்ல ,
டேய் அண்ணா இந்த கேள்விய எத்தன வாட்டி தான் கேட்ப எருமை என்று தலையில் அடித்து கொண்டாள்.ஏ please சொல்லு மா அவன் ஏங்கிட்ட பேசுவான்ல ,கண்டிப்பா அவரு பேசுவாறு நீ இப்டியே கேட்டுட்டு இருந்த கொன்னுடுவேன் பேசாம போ என்று கூற சிறிது நேரத்தில் ஷ்ரவன் வீட்டை அடைந்தனர்.
ஷ்ரவன் வீட்டில் பைக்கை நிறுத்தியதும் ஓஹ் இது தான் ஏ ஆளு வீடா செம்மையா இருக்கு டா அண்ணா ,ம்ம் சரி வா உள்ள போகலாம் என்று கூறி ஷர்மியுடன் வீட்டிற்குள் நுழைய ஷர்மி என்ன தான் இருந்தாலும் ஏ மாமியார் வீடு என்று புன்னகையுடன் தனது வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்தாள்.
அடடேய் வா ஷாம் என்று புன்னகையுடன் அவனை வரவேற்றார் சீத்தா.
அவருக்கு சிறுபுன்னகையை பரிசாக அளித்தான் ஷாம்.
ஷர்மியை பார்த்து யாருடா இந்த பொண்ணு என்று கேட்க இவ என்னோட தங்கச்சி மா சித்தி பொண்ணு என்று கூறினான்.
ஷர்மி சென்று அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க நல்லா இருடா ஓ பேர் என்ன டா என்றார் புன்னகையுடன்
ஏ பேரு ஷர்மிளா ஆன்டி என்றால் சிறுமிருவலுடன்,ம்ம் நல்ல பேரு டா பின் வீட்டில் உள்ள அனைவரும் வர ஷர்மி அனைவரிடமும் சகஜமாக பேசி சிறிது நேரத்தில் அனைவரிடமும் ஒட்டி கொண்டாள்.
ஷாம் ஷர்மி காது அருகில் குனிந்து ஏ நீ என்னோட friend அ ஏங்கிட்ட பேசவைக்க வந்தியா இல்ல ஓ மாமியார் வீட்டுல இருக்குறவங்கல கரைட் பண்ண வந்தியா என்று கேட்க, ம்ம் நா ஏ ஆளத்தான் கரைட் பண்ண டைம் ஆகுது அதுக்குள்ள frist இங்க இருக்குறவங்கல கரைட் பண்ணா அவரு வேணான்னு சொன்னா இவங்க மூலமா எனக்கு ஏங் காதல் திருமணத்தில் முடியும் ல அதன் சரி சரி இப்போ ஏ ஆளு எங்கணு கேளு என்று கூறினாள்.
