மீட்டிங் முடிந்து ஆஃபீஸ்ற்கு வந்த ஷ்ரவன் மீட்டிங் சக்ஸஸ் ஆகி விட சந்தோசமாக ஷர்மியிடம் சொல்ல வர அவள் அங்கு அவள் இருக்கையில் இல்லாமல் இருக்க மேனேஜரை அழைத்து கேட்க என்னனு தெரியல சார் உடம்பு சரி இல்ல னு சொல்லிட்டு போய்ட்டாங்க அவங்க முகமே சரி இல்ல சார் ரொம்ப டல்லா இருந்தாங்க நீங்க வெளிய போனதுமே கெளம்பிட்டாங்க என்று கூறினார்.
ஷ்ரவன், புருவம் சுருங்கி சரி நீங்க போங்க என்று கூற அங்கிருந்து சென்றார்.
ஷ்ரவன் மொபைலை எடுத்து ஷர்மி க்கு call செய்ய அது சூட்ஆஃ என்று வர என்ன ஆச்சி அவளுக்கு என்று யோசிக்க அவன் அவளை திட்டியது நியாபகம் வர ஓஹ் சர்ட் நா கோபத்துல அவள திட்டிட்டேன்னே டேய் ஷ்ரவன் ஒனக்கு அறிவே இல்ல டா லூசு ஐயோ என்று தலையில் அடித்து கொள்ள அந்த நேரம் பார்த்து ஷாம் உள்ளே வர டேய் என்னடா ஆச்சு எதுக்கு இப்டி தலைல அடிச்சிக்கிட்டு இருக்க என்று ஷ்ரவன் எதிரே உள்ள இருக்கையில் அமர்ந்தான்.
அது ஒன்னும் இல்ல டா என்று ஷ்ரவன் அனைத்தையும் கூற டேய் எதுக்கு டா இப்டி பண்ண ஒனக்கு அறிவு இல்லையா
டேய் sorry டா என்று தலையை தொங்க போட்டு கொண்டு ஷ்ரவன் சொன்னான்.
ஏங்கிட்ட sorry கேட்டு என்ன பிரையோச்சனம் கோபத்துல என்ன பேசுறன்னு தெரியாதா உனக்கு பாவம் அவ எவ்ளோ ஹார்ட் ஆனாலோ சின்ன பொண்ணு டா அவ என்று தலையில் கைவைத்து கொண்டு டேய் அவள எப்டியாச்சும் சமாதானம் பண்ண ஐடியா கொடுடா என்று பாவமாய் முகத்தை வைத்து கொண்டு கேட்டான்.
இதுல நா ஒன்னும் பண்ண முடியாது அவள நீயே சமாதானம் செய்ய இப்போ வா வீட்டுக்கு போலாம் என்று இருவரும் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
மறுநாள் ஷ்ரவன் எவ்ளோ பேச முயன்றும் ஷர்மி அவன் முகம் கூட பார்க்காமல் தனது வேலைகளை மட்டும் செய்து கொண்டு இருந்தால் ஷ்ரவனின் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலே தான் முடிந்தது.
இப்படியே ரெண்டு நாட்கள் நகர்ந்தது மறந்தும் ஷர்மி தேவைக்கு அதிகமாக ஷ்ரவனிடம் பேசவும் இல்லை நிமிர்ந்து அவள் முகத்தை பார்க்கவும் இல்லை.