அதற்கு பின் தடபுடலாக கல்யாணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தனர்.
நிவி தமிழ் வீட்டிற்கு வர வா மா நிவி ,தனம்.
மா என்னமா கல்யாண பொண்ணு என்ன சொல்லுறா என்றாள்.
அவர் ஏதோ கூற வர அதற்குள் அங்கு வந்த மித்து அவ என்னமோ க்கா கனவுலையே இருக்கா
ஓ இப்போ எங்க இருக்கா ,அவ ரூம்ல தான் இருக்கா க்கா நீங்க போய் பாருங்க ம்ம் ஓகே ஓகே டா என்று கூறி தமிழ் அறைக்குள் செல்ல அவளோ குப்பற படுத்து கொண்டு கைகளை இரண்டையும் தலையணையில் வைத்து அதில் முகத்தை வைத்து கால்கள் இரண்டையும் ஆட்டி கொண்டே புன்னகையுடன் கண்களை திறந்து கொண்டு கனவு கண்டு கொண்டு இருந்தாள்.
நிவி தமிழ் நிலையை பார்த்து சிரித்து கொண்டே தமிழ் என்று அழைக்க ஆனால் அவளோ இன்னும் அதே போல் இருக்க தலையில் அடித்து கொண்டு அவள் அருகில் சென்று மீண்டும் தமிழ் தமிழ் என்று அழைக்க அடிப்பாவி ஒன்ன என்று அருகில் இருந்த தலையணை எடுத்து அவளை அடிக்க அதில் நினைவிற்கு வந்த தமிழ் ஏ நிவி எப்போ வந்த வந்தது சரி டி வந்ததும் எதுக்கு லூசு என்ன அடிக்க எரும
அடிப்பாவி இங்க வந்து ஒரு மனுஷி கூப்பிட கூப்பிட திரும்பாமா இருந்தா ஒன்ன என்ன கொஞ்சுவங்களா என்று கூறி முறைக்க
அதில் அசடுவலிய தமிழ் சிரிக்க கொடும கொடும என நிவி தலையில் அடித்து கொண்டு தொப்பென்று கட்டிலில் அமர்ந்தாள்.
சரி சரி விடு ,என்னடி விட அப்டி என்னடி யோசிச்சுக்கிட்டு இருந்த, நிவி.
அது ஒன்னும் இல்ல டி சும்மாதான்
யாரு காதுல பூசுத்துற ஒழுங்கா சொல்லு
ம்ம் சும்மா ஏ சித்து பேபி பத்தி யோசிச்சுகிட்டு இருந்தன்
ஓ பாருடா என்று கூறி எதையோ தேட
என்னடி தேடுற
ம்ம் யாரோ அவன எனக்கு புடிக்காது ,அவன் திமிரு புடிச்சவன் அப்டி இப்டின்னு ஒரு மானஸ்தி சொன்னா அவள தான் கொஞ்ச நாளா தேடிக்கிட்டு இருக்கேன் என்று கூற
யாரடி அது
ம்ம் என்று ஒற்றை புருவம் உயர்த்தி பார்க்க
சரி சரி கோபப்பட கூடாது என்று கூற