ஷ்ரவன் வீட்டிற்கு வர இரவு 8.00 மணி ஆனது ,வீட்டிற்கு வந்ததும் நேராக தனது அறைக்கு சென்று குளித்து விட்டு டீ ஷர்ட்டும் சாக்ஸும் அணிந்து கொண்டு கீழே வர அனைவரும் ஒன்றாக சாப்பிட அமர்ந்தனர்.
ஹாய் அண்ணா என்ன ரொம்ப பிஸியா, ஷாலினி.
சிறுபுன்னகையுடன் அப்டிலாம் இல்ல டா, ஷ்ரவன்.
அப்றம் நா ஒங்கள பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு தெரியுமா, சோகமாக
ஸாரி டா கொஞ்சம் ஒர்க் அதிகம் டா
போ ண்ணா எனக்கு தெரியாது நாளைக்கு சண்டே சோ எந்த காரணமும் சொல்ல கூடாது நீங்க ஏ கூட தான் டைம் ஸ்பென் பண்ணனும் ஓகே வா.
இல்ல டா என்று ஏதோ கூற வர அண்ணா please ண்ணா please என்று கெஞ்ச ம்ம் ஓகே டா நாளைக்கு என்ன ப்ளான்.
ரித்விக், ம்ம் அத நாளைக்கு டிஸைட் பண்ணலாம்.
ம்ம் ஓகே டா இப்போ சாப்பிடுவோமா
ம்ம் டபுள் ஓகே என்று இருவரும் கூற அனைவரும் சாப்பிட்டு முடித்தனர்.
மறுநாள் காலை அழகாக விடிய குஷியாக ரித்விக்கும் ஷாலினியும் கிளம்பினர்.
இருவரும் அடித்தது பிடித்து கொண்டு ஷ்ரவன் அறைக்கு சென்றனர் ஆனால் ஷ்ரவன் அறையில் இல்லை என்று தெரிந்ததும் இருவரும் சோகமாக கீழே வந்து அமர சீத்தா என்ன ரெண்டு வாலுங்களும் அமைதியா இருக்கிங்க என்ன விஷயம் ,மா அண்ணா எங்க மா போனாரு நேத்து எங்க ரெண்டு பேரையும் வெளிய கூப்பிட்டு போறேன்னு சொன்னாரு but இப்போ அவர ஆளவே காணும் எங்க போனாரு ,ஓ சொல்ல மறந்துட்டேன் டா அவன் காலைலயே ஏதோ மீட்டிங் இருக்குனு கிளம்பி போய்ட்டான் டா ,அப்போ அண்ணனுக்கு நாங்க முக்கியம் இல்லல ,ஷாலினி.
இல்ல ஷாலு அவனுக்கு எல்லாருமே முக்கியம் தான், சீத்தா.
இல்லமா காலேஜ் படிக்கும் போது அண்ணா எப்டி இருந்தான் இப்போ பாரு அப்டியே அதுக்கு அபொசிட்டா நடத்துகிறான், ரித்விக்.
ஆமா அண்ணா மாறிட்டாரு எனக்கு என்னோட பழைய ஷ்ரவன் அண்ணா தான் வேணும் எனக்கு அவன தான் புடிக்கும் அவன மறுபடியும் நாம பாக்கவே முடியாதா கண்களில் கண்ணீறுடன் தனது அறைக்கு சென்று கதவை அடைத்து கொண்டால், ஷாலினி.
