என் இனிய மணாளனே-12

2.1K 70 4
                                    

மறுநாள் காலை ஞாயிறு என்பதால் அனைவரும் தாமதமாக எழ ஷ்ரவன் தன் அறையில் ஒருத்தி இருப்பதை மதிக்காமல் எழுந்ததில் இருந்து அவள் முகம் கூட நோக்காமல் குளித்து முடித்து விட்டு ஆஃபீஸிற்கு கிளம்பி கீழே சென்றான்.

அவனின் பாராமுகத்தில் நெஞ்சம் வலித்தாலும் எல்லாம் சீக்கிரம் சரியாகும் என்ற நம்பிக்கையுடன் கடவுளை வேண்டி கொண்டு குளியலறைக்குள் குளிக்க சென்றாள்.

ஷ்ரவன் கீழே வர டேய் என்னடா இது நேத்து தான கல்யாணம் ஆகிருக்கு அதுக்குள்ள ஆஃபீஸ்க்கு போற அதுவும் இல்லாம இன்னைக்கு சண்டே ஆஃபீஸ் லீவ் தானடா, சீத்தா.

மா என்ன கடுப்பேத்தாதிங்க எனக்கு நிறைய வேல இருக்கு அதுவும் இல்லாம நா என்னவோ அவள உருகி உருகி காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி பேசுரிங்க என்று முறைப்புடன் கூற

என்னதான் இருந்தாலும் அவ பாவம் டா அவ மனசு கஷ்டப்படும் டா

ம்ம் பாவமா யாரு அவ நா அப்போவே சொன்னே இந்த கல்யாணம் வேணாம் நீயே நிப்பாட்டு ன்னு அவ கேட்கல ஏதோ பெரிய இவல்லாட்டம் என்ன லவ் பண்றேன் அப்டி இப்படின்னு சொன்னா நா சொன்னத கேட்டுருந்தா அவளுக்கு இந்த கஷ்டமல்லாம் தேவையா நல்லா அனுபவிக்கட்டும் என்று கூறி அங்கிருந்து கிளம்பி தனது காரை எடுத்து கொண்டு ஆஃபீஸை நோக்கி சென்றான்.

அவன் சென்ற திசையையே சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்து விட்டு திரும்ப அவன் கூறியதை கேட்டு கண்களில் கண்ணீரோடு அவன் சென்ற திசையை பார்த்து கொண்டு இருந்தாள்.

அவள் அருகில் சென்ற சீத்தா அவளின் கண்ணீரை துடைத்து விட்டு சமாதானம் செய்து அவளுக்கு காபி போட்டு கொடுக்க
சோஃபாவில் அமர்ந்து காபி குடித்து கொண்டு இருக்க ரித்விக்கும் ஷாலுவும் அவள் அருகில் வந்து அமர்ந்து கதை பேச ஆரம்பிக்க அவர்களிடம் பேசியதில் அனைத்தையும் மறந்து மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருந்தாள்.

அவளின் இந்த சிரிப்பு எப்பவும் அவ முகத்துல இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி கேட்டார் சீத்தா.

என் இனிய மணாளனே!!Donde viven las historias. Descúbrelo ahora