என் இனிய மணாளனே-34

2.1K 81 4
                                    

குளியல் அறை கதவு திறக்கும் சத்தம் கேட்டு ஷ்ரவன் திரும்பி பார்க்க அங்கு பனியில் நனைந்த ரோஜா போல் சிவப்பு நிற காட்டன் புடவையில் தமிழ் நின்றுகொண்டு இருந்த தன்னை மறந்து அவளை ரசித்து கொண்டு இருந்தான் ஷ்ரவன்.

தமிழ் தன் தலையை துவட்டி கொண்டே நிமிர்ந்து பார்க்க தன்னையே ரசனையுடன் பார்த்து கொண்டு இருந்த ஷ்ரவனை கண்டவள் அதிர்ச்சி அடைந்த தமிழ் விழிவிரித்து ஐயோ தமிழ் ஒனக்கு என்னம்மோ ஆச்சுடி எங்க பாத்தாலும் சித்து மாமா இருக்குற மாறியே தெரியுதே ஒரு வேல லவ் அதிகமாகி பைத்தியம் புடிச்சிருச்சோ என்று வாய்விட்டு புலம்ப
அவள் தன்னை பிரம்மை என்று எண்ணி கொண்டு இருப்பதை பார்த்து ஷ்ரவன் இதழில் புன்னகை மலர்ந்தது  அடுத்து அவள் என்ன செய்ய போகிறாள் என்று ஆர்வமாக பார்க்க

தமிழ் தன் தலையை உலுக்கி கொண்டு இல்ல இது உண்மை இல்ல என்று தனக்கு தானே சொல்லி கொண்டு கண்ணாடி முன் சென்று  நின்றவள் நெற்றியில் பொட்டு வைத்து விட்டு குங்குமத்தை எடுத்து வகிட்டில் வைத்து கொள்ள ஷ்ரவன் மெல்ல அவள் பின் சென்று நிற்க்க கண்ணாடி வழியே அவனை பார்த்த தமிழ் என்ன எப்பையுமே வந்ததும் மறஞ்சிருவாறு இப்போ என்ன ஆச்சு ஒருவேளை நிசமாவே வந்துட்டாரோ என்று கூறி விட்டு பின் ச்சே ச்சே அவரு அதுக்கெல்லாம் சரி பட்டு வர மாட்டாரு என்று கூற

ஷ்ரவன் அவள் கூறிய வார்த்தையில் புன்னகை புரிந்து மேலும் அவளை நெருங்கி நின்று அவள் வெற்றிடையில் கை வைத்து தன்னோடு சேர்த்து பின்னிருந்து அவளை அணைத்து அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து கண்ணாடியில் அவளை பார்த்து கொண்டே நா எதுக்கு டி சரி பட்டு வரமாட்டேன் என்று என்று கேட்க

அவள் அவன் தன்னை அணைத்ததில் அதிர்ச்சியில் விழி விரித்து அப்படியே நிற்க்க அவன் அவள் விழிகளில் விழுந்து மேலும் அவளை இறுக்கி அணைத்து சொல்லுடி நா எதுக்கு சரி பட்டு வரமாட்டேன் என்று அவள் காதில் கிசுகிசுக்க அதில் தெளிந்தவள் தான் அவன் அணைப்பில் இருப்பதை கண்டு வெட்கத்தில் தலை குனிந்து கொண்டு கூச்சத்தில் நெளிய அவள் வெட்கத்தை ரசித்தவன் அவளை தன்னை நோக்கி திருப்பி அவள் முகத்தை நிமிர்த்தி அவள் விழிகளை பார்க்க கண்கள் கலங்கி இருந்தது அதில் பதரியவன் அவளை இழுத்து அணைத்து கொள்ள அவளுக்கும் இந்த அணைப்பு தேவை என்பதால் அவன் நெஞ்சில் புதைந்து கண்ணீர் வடித்தால் அவன் ஆதரவாக அவள் தலையை வருடி கொண்டே இருந்தான்.

என் இனிய மணாளனே!!Where stories live. Discover now