என் இனிய மணாளனே-3

3.1K 80 2
                                    

அறைக்கு சென்ற ஷ்ரவன் தன் கபோர்டில் இருந்து ஒரு போட்டோவை எடுத்து மளன மாக அவனது மனம் கண்ணீர் வடித்தது.

மீண்டும் அதை கபோர்டில் வைத்து விட்டு யாரிடமும் சொல்லாமல் வீட்டில் இருந்து வெளியில் வந்து தன் காரை எடுத்து கொண்டு சென்றான் கடற்கரையை நோக்கி அங்கு சென்ற கடலை வெறித்த படி அங்கு அமர்ந்தான்.

சீத்தா அவனது அறைக்கு சென்று பார்க்க அறை காலியாக இருக்க பதட்டத்துடன் கீழே வர ராஜேந்திரன் என்ன சீத்தா என்ன ஆச்சு என்றார் .

இல்லங்க ஷீரவன ரூம்ல காணோம் என்றார், சீத்தா.

சரி நீ பதட்டப்படாம இரு நா கால் பண்றன், ராஜேந்திரன்.

ம்ம் சரிங்க சீக்கிரம், சீத்தா.

கடற்கரையில் அமர்ந்து இருந்தன் தன் வாழ்க்கையின் கடந்த கால எண்ணங்களில் மூழ்கி இருந்தான் அவனின் போன் அலரியத்தில் நினைவிற்கு வந்தது போனை எடுத்து காதில் வைத்தான் ம்ம் சொல்லுங்க பா, ஷ்ரவன்.

எங்கடா இருக்க ஒன்னோட அம்மா இங்க டென்ஷன்னா இருக்கா, ராஜேந்திரன்.

பக்கத்துல தான் இருக்கேன் இன்னும் 15 மினிட்ல வீட்டுல இருப்பேன்,ஷ்ரவன்.

ம்ம் ஓகே டா சீக்கிரம் வா என்று அழைப்பை துண்டித்தார்.

பெரும் மூச்சு ஒன்றை விட்டு காரை எடுத்து வீட்டை நோக்கி சென்றான்.

மறுநாள் ஞாயிறு என்பதால் தாமதமாக எழுந்தால் தமிழ்.

குளித்து முடித்து விட்டு ப்ளூ கலர் சுடி ஒன்றை அணிந்து அளவான ஒப்பனைஉடன் மா நானும் நிவியும் ஷாப்பிங் போறோம் என்று கூற ம்ம் சரி டா சீக்கிரம் திரும்பி வா என்று அனுப்பிவைத்தார்.

தனது ஸ்கூட்டியில் நிவி வீட்டிற்கு சென்றாள்.

அடடே வாமா தமிழ் என்று புன்னகையுடன் வரவேற்றார் நிவியின் அம்மா ராஜேஸ்வரி.

குட் மோர்னிங் மா என்றால் புன்னகையுடன்

குட் மோர்னிங் வா என்று வீட்டிற்கு உள் அழைத்து சென்றார்.

என் இனிய மணாளனே!!Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ