ஷ்ரவன் தமிழை தேடி செல்ல அங்கோ அவளை சுற்றி வானரப்படைகள் இருக்க இவக்கிட்ட இப்போ போய் நாம தனியா பேசணும்னு சொன்னனா அவ்ளோதான் நாம இதுங்ககிட்ட இருந்து தப்பிக்க முடியாது நம்மள என்று பெறும் மூச்சொன்றை விட்டு தனது அறைக்கு செல்ல அங்கு ஷாம் உறங்கி கொண்டிருந்தான்.
டேய் எழுந்திரு டா எரும ,ஷ்ரவன்.
ஏஏஏ....... எதுக்குடா இப்போ இப்டி காதுகிட்ட வந்துகத்துற,ஷாம்.
ம்ம்ம் நீ எல்லாம் ஒரு friend,
இப்போ ஒனக்கு என்ன டா வேணும்,
இந்த கல்யாணத்த நிறுத்த ஐடியா கொடுடா,
அவன் இவ்வாறு கூற தூக்கத்தில் இருந்து விழித்தவன் எழுந்தமர்ந்து திரு திருவென முழித்து விட்டு நானே இந்த கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லாம நடக்கணும்னு நெனச்சா இவன் ஏ கிட்டவே வந்து கல்யாணத்த நிப்பாட்ட ஐடியா கேட்குறான் என்று தன்னை தானே நொந்து கொள்ளஏ என்னடா எதுவுமே சொல்லாம இருக்க என்று ஷாமை உழுக்க அதில் நினைவு வந்தவனாய் அது ஒன்னும் இல்ல டா நா என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தன் என்று கூற
ஷாம் இந்த கல்யாணத்த நடத்துறதா எப்டின்னு யோசிக்க,ஷாரவனோ எப்டி இந்த கல்யாணத்த நிறுத்துறதுன்னு யோசித்து கொண்டு இருந்தான்.
ஷாம் first போய் நாம தமிழ் கிட்ட பேசணும் என்று எண்ணிக்கொண்டு டேய் நீ யோசி நா போய் குளிச்சுட்டு வந்துறேன் என்று கூறி குளியலறைக்குள் சென்று குளித்து விட்டு வந்து உடை மாற்றி நா போய் சாப்பிட்டு வாறேன் என்று கூறி விட்டு கீழே சென்று தமிழை தேட பின் மகாவிடம் சென்று கேட்க அவ வெளிய தோட்டத்துல உட்கார்ந்து இருப்பாள் என்று கூற
அவளை தேடி செல்ல அங்கு
தமிழுக்கு போன் வர அதை அட்டெண்ட் பண்ணி காதில் வைத்து ஹெலோ ஹெலோ என்று கத்திகொண்டே இருடி டவர் ப்ரொபளம் போல இப்போ வந்துறேன் என்று கூறி தமிழ் கொஞ்சம் தள்ளி சென்று பேசிக்கொண்டு இருக்க அப்பொழுது அங்கு ஷாம் அவளை பார்க்க அவள் தன் கையில் இருந்த போனை நொண்டி கொண்டு இருந்தால் இவன் வந்ததை கவனிக்காமல் இருக்க
