ஏ ஷாம் அண்ணா ஒங்க friend பேச மாட்டாரா என்று கேட்க இந்த கேள்வியில் இவ்ளோ நேரம் மொபைல் நொண்டி கொண்டு இருந்த ஷ்ரவன் நிமிர்ந்து ஷ்ரமியை பார்த்தான்.
அவளும் அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்.
ஷாம், நீ யார சொல்லுற என்று கேட்க அவள் ஷ்ரவனை பார்க்க அவனும் அவளை தான் பார்த்தான்.
சிறுபுன்னகையுடன் வேற யாரு இவர தான் என்று ஷ்ரவனை பார்த்து கூறினாள்.
ஷ்ரவனோ அவள் பதிலில் அருகில் இருந்த ஷாமை முறைத்து பார்த்தான் ஷாம் அவன் முறைப்பதை பார்த்து மனதில் ஆமா இவன் அப்டியே பொண்ணுங்க கிட்ட பேசிட்டாலும் அவன ப்ரோபோஸ் பண்ண வந்த பொண்ணுங்க கிட்டவே மூஞ்சி கொடுத்து கூட பேசமாட்டான் அதையும் மீறி பேசுனா திட்டிவிற்றுவான் இப்போ இவ வேற இப்டி கேட்குறாளே ஷர்மி இன்னைக்கு நீ செத்த போ என்று ஷாம் நினைத்து விட்டு
வெளியில் சிரித்து கொண்டே அவன் எப்பவுமே பொண்ணுங்க கிட்ட அவ்ளோ வா பேசமாட்டான் ஷர்மி
ஏ பொண்ணுங்க கிட்ட பேசுனா அவங்க என்ன இவர கடிச்சா திங்க போறாங்க
ஷ்ரவன், ஏ அது ஏ இஷ்டம் ஓ வேல எதுவோ அதமட்டும் பாரு என்று கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
ஷாம், ஏ நீ எதுக்கு அவன கோப படுத்துற அவன பத்தி ஓங்கிட்ட ஏற்கனவே சொல்லிருக்கேன்ல
ம்ம் சும்மா தான் சரி பாய் கிளாஸ்க்கு
டைம் ஆச்சு என்று அங்கிருந்து கிளம்பி கிளாஸ்சிற்கு சென்றாள்.ஷாம் வந்து கிளாசில் அமரவும் ஷ்ரவன் ஏ ஓ தங்கச்சிக்கு என்ன கொழுப்பா தேவையில்லாம பேசிக்கிட்டு இருக்கா சொல்லி வை இல்ல அவ பண்றதுக்கு நீ தான் அனுபவிக்கனும் என்று கூற
அடப்பாவிங்கல்லா நா என்னடா பண்ணன்
ம்ம் நீ ஒன்னும் பண்ணல தான் ஆனா இனி அவ பண்றதுக்குலாம் நீதான் பொறுப்பு
இதலாம் ரொம்ப ஓவர் டா சரி நா அவ கிட்ட சொல்லுறேன்
ம்ம் சரி ,ஷ்ரவன்.