பொங்கும் புகையிலே சொர்க்கம் மதியிலே.

221 3 0
                                    

இறைவன் இவ்வுலகை படைத்தது நாம் நிம்மதியாக வாழ்வதற்க்காக அல்ல. நம்மை துன்புறுத்தி அதில் மகிழ்வுறும் மானங்கெட்டவன்‌ தான் அந்த இறைவன். கடவுள்‌ ஒரு Sadist. மற்றவர் துன்பத்தில் துவழும் போதும் மேலும் துன்பத்தை தூக்கித்தருபவன் தான் இந்த இரக்கமில்லாத இறைவன். நல்லவன் என்ற போர்வையில் நம்மை இந்த நரகத்தில் நசுக்கிக்கொண்டிருக்கின்றான். இறைவன் கொடியவன், சாத்தான் இறைவனை‌ காட்டிலும் மேன்மையுடவன். இந்த நரகத்தில் வாழ மிருகமானால் தான் முடியும் என்பதை நிமிடத்திற்க்கு ஒரு‌ முறை நினைவூட்டபவனே சாத்தான்.

இந்த மானங்கெட்ட மனிதக்கூட்டம் தித்திக்கும் விஷம் கலந்த இனிப்பையே விரும்பும். கசப்பான மருந்து என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். கடவுள் தித்திக்கும் விஷம், அரக்கன் கசப்பான மருந்து. இந்த உலகத்தில் பேரழிவு நடத்தி பேரானந்தம் அடைபவன் தான் இறைவன். இருள்‌ என்பது நிஜம் வெளிச்சம்‌ என்பது ஒரு‌ மாயை. இந்த பிரபஞ்சம் முழுவதும் இருளால் சூழப்பட்டது தான். இந்த பிரபஞ்சத்தில் தனித்துவிடப்பட்ட அனாதை ஆன்மாக்கள்‌ தான்‌ நாம். இந்த அர்த்தமற்ற வாழ்விற்க்கு அர்த்தம் தேடி அலையும் அனாதைக்கூட்டம் தான்‌ இந்த மனித இனம்.

சுற்றிலும் இருள் சூழ்ந்த வானம். இருள் வானை இருள் மேகங்கள் அடைத்து கரிய இருளாக காட்சியளிக்கின்றது. வெளிச்சம் என்ற சொல்லுக்கு கூட இடமில்லை. கண்ணை மூடினால் கூட இப்படி ஒரு இருளை பார்க்கமுடியாது‌. கடவுளின் மனம் இப்படித்தான் இருக்கும் போல. திடீரென்று ஒரு தீப்பொறி மட்டும் தெரிகிறது. இது ஏதோ லைட்டரில் இருந்து வருகிறது. அந்த சிறிய வெளிச்சம் ஒரு ஆணின் முகத்தை ஒரு நிமிடம் பிரதிபலித்தது. பாக்ஸ் கட்டிங் வெட்டப்பட்ட ஹேர் கட். சற்று ஒட்டிய கன்னங்கள். சாத்தானிடம் சரணடைந்த சிவந்த கண்கள். உணர்ச்சியற்ற முகம். அவன் மாநிற உடலுக்கும் அவன் கரிய உதடுகளுக்கும் சம்பந்தமே இல்லை. ஆயினும்,பார்ப்பதற்கு சற்று வசீகரமாகவே இருந்தது அந்த முகம். வாயில் கஞ்சா சுற்றி வைக்கப்பட்ட RAW OCB. அது மிகவும் தடிமனாகவும், சற்று வழக்கத்தை விட பெரிய சிகரெட் போன்றும் காட்சி அளித்தது.

வன்மம் 18+Where stories live. Discover now