பைரவ்: டேவிட் அண்ணே?
என்று தனது கைகளை டேவிட்டிடம் குளுக்கினான். ராம் கையில் ஒரு பீர் பாட்டில் மற்றொரு கையில் லெமன் பக்கார்டி ஹாஃப் வைத்திருந்தான்.
டேவிட்: வாடா நல்லவனே. என்ன இந்த பக்கம்?
என்றார் அருகில் இருந்த அவனுடைய மாமாவை பார்த்துக்கொண்டு.
பைரவ்: மாமா வந்துருக்காரு ப்ரோ அதான்.
உத்தமனும், டேவிட்டும் பேச ஆரம்பித்தார்கள். உத்தமன் தனது பாக்கெட்டில் இருந்து இரண்டு 500 ரூபாய் தாளை எடுத்து பைரவ் இடம் கொடுத்தார்.
பைரவ்: என்ன அங்கிள் வாங்க?
என்றான். உத்தமனின் பார்வை ராம்-ன் கையில் இருந்த பக்கார்டி பாட்டிலில் இருந்தது. அதிலேயே புரிந்து கொண்டான்.
உத்தமன்: பக்கார்டி இரண்டு ஹாஃப் வாங்கிக்கோ.
என்று மீண்டும் டேவிட்டிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். பைரவர் மெல்ல பாட்டில் வாங்கும் கடைக்கு சென்றான். அவ்வளவாக கூட்டம் இல்லை. மெல்ல படிக்கட்டில் ஏறினான். நல்ல கம்பி போட்டு அடைக்கப்பட்டிருந்தது. பாட்டில்கள் வாங்குவதற்க்கு மட்டும் ஏற்ற சிறிய ஓட்டை. அதன் வழியே காசைக்கொடுக்கலாம் பாட்டில்கள் வாங்கிக்கொள்ளலாம். விதவிதமான பாட்டில்கள் எக்ஸ்பிரஸ், ராயல் அக்கார்டு, காப்பர், கடா மார்க், பிங்க் வோட்கா, பக்கார்டி போன்ற குவாட்டர் பாட்டில்கள் கீழ் வரிசையையும், நெப்போலியன், 100 பைப்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ், பக்கார்டி, போன்ற ஹாஃப் பாட்டில்கள் மேல் வரிசையை அழங்கரித்து இருந்தன. பிரிட்டிஷ் எம்பையர், கார்ல்ஸ்பெர்க், கிங் ஃபிஷ்ஷர், ஷிங்காரோ, 10000 போன்ற பீர் பாட்டில்கள் ஃபிரிட்ஜில் அழகாக அடுக்கப்ப்ட்டிருந்ததை திறக்கும்போது பார்த்தான். அப்படியே அவனது காதில் ஆதினியின் குரல் ஒலிக்கத்தொடங்கியது. அவள் ஒரு கதையை சொல்ல ஆரம்பித்தாள். ஒருவன் மனதினாக பிறந்து வாழ்நாள் முழுவதும் எந்த பெண்ணிடமும் உடலுறவு கொள்ளாமல் இருந்தானாம். ஒரு நாள் இரவு கண்களை மூடி தூக்கும் போது அப்படியே இறந்து விட்டானாம். அவன் இறந்தவுடன் அவனது ஆன்மா சொர்க்கத்தை சென்றடைந்ததாம். கடவுள் அங்கே இருந்தாராம். அவனிடம் அந்த கடவுள் ஒரு வரம் கொடுத்தாராம். இவ்வளவு நாள் நீ எந்த பெண்ணிடமும் உடலுறவு வைத்துக்கொள்ளவில்லை. அதனால், உனக்கு இந்த சொர்க்கத்தில் இருக்கும் எந்த தேவதையுடன் வேண்டுமானாலும் நீ உடலுறவு செய்து கொள்ளலாம் என்று வரம் வழங்க. அவன் தெய்வீகமாக இருக்கும் எந்த தேவதையுடன் உடலுறவு கொள்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தானாம். இறுதியாக ஒரு தேவதையை தேர்ந்தெடுத்து அவள் தேகத்தை தொடும் போது அவன் மெல்ல நரகத்தை நோக்கி விழத்தொடங்கினானாம். அப்போது கடவுள் சொன்னாராம் நீ காமத்தை கடக்கவில்லை அடக்கியுள்ளாய் அதனால் நீ புனிதமான ஆன்மா என்று கடவுள் சொன்னாராம். அவன் இருள் சூழ்ந்த நரகத்தில் விழுந்தவுடன் கண்களை முழித்தானாம். கட்டிலில் படுத்துக் கிடந்தானாம் அது அவனுடைய கனவு. மெல்ல எழுந்து விலை மாதுவின் வீட்டை நோக்கி நடந்தானாம். காமத்தை கடந்தால் மட்டுமே கடவுள் நிலைக்குச்செல்லுவாய். காமத்தை அடக்க அடக்க அது ஒரு நாள் வெடித்து சிதறிவிடும் என்று ஆதினி கூறினாள். பைரவ் மெல்ல ஆதினிக்கு தன் மனதினுள்ளே பதிலளித்தான்.
YOU ARE READING
வன்மம் 18+
Actionஇது ஒரு பாவக்கதை. இளகிய மனம் கொண்டவர்கள் படிப்பதற்க்கான கதை அல்ல. முழுக்க, முழுக்க இருள் சூழ்ந்த மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் இந்தக்கதை. இதில் அதிகப்படியான ஆபாசக்காட்சிகள் வரும் காரணத்தினால் முன்கூட்டியே எச்சரித்துவிடுகின்றேன் இது திறந்த உள்ள...