பைரவ்: இல்ல ரேகா உன்னோட பெர்ஸ்பெக்டிவ்-ல இப்போதான் யோசிச்சு பாக்குறேன். நீ சொல்லுறதுலையும் நியாயம் இருக்கு. எனக்கு வயசு 19 தான் ஆகுது. அத நான் மறந்து போயிடுறேன்.
ரேகா அதற்க்கு மேல் எதுவும் பேசாமல் அவ்விடத்தில் இருந்து கிளம்பினாள். கட்டியணைத்தலும், இதழ் முத்தமும் இல்லாமல் இருவரும் முதன் முதலாக செல்கின்றார்கள். பைரவ் மெல்ல தனது அறைக்கு சென்று ஃபோனை எடுத்து பார்த்தான். அதில் டேவிட் என்ற நம்பரில் இருந்து ஃபோன் வந்திருந்தது. மெல்ல டேவிட்-ற்க்கு ஃபோன் செய்தான்.
டேவிட்: ஹலோ பைரவ்?
ஏதோவொரு பதட்டத்துடன்.
பைரவ்: குட் மார்னிங் ப்ரோ. சொல்லுங்க என்ன காலையிலேயே ஃபோன் பண்ணிருக்கிங்க.
டேவிட்: டேய் பைரவ் ஒரு சின்ன பிரச்சினை டா. உடனே கிளம்பி பெரியாஸ்பத்தரிக்கு வாடா. அவசர வார்டு-ல தான் இருக்கேன். சீக்கிரம் வாடா.
பைரவ்: என்னாச்சு ப்ரோ? ஹலோ...
என்று கேட்பதற்க்குள் ஃபோன் கட் செய்யப்பட்டு விட்டது. வேகமாக கீழே இறங்கி ஓடி வந்தான். பைக்கை வேகமாக எடுத்தான். கிக்கரில் மிதித்து டர்....டட்...டட்...டர்.... என்று புறப்பட ஆரம்பித்தான். அந்த ஆர்எக்ஸ் 100 வண்டி புகையை கக்கிக்கொண்டு கிளம்பியது. மெல்ல கவர்மெண்ட் ஆஸ்பத்தரிக்குள் நுழைந்தான். இடது பக்கம் ஓபி பேஷண்டுகள் பதிவு செய்துகொண்டிருந்தார்கள் தங்கள் பெயர் மற்றும் விலாசத்தை. அது ஒரு மிகப்பெரிய இடம். தினசரி நோயாளிகள் வந்து போகும் இடம். அதன் அருகில் வண்டிகள் நிறுத்துமிடம் இருந்தது. நன்கு வேப்ப மரங்கள் நின்று கொண்டிருந்தது. அதன் கீழ் தனது வண்டியை நிப்பாட்டினான். தனது பாக்கெட்டில் இருந்து சர்ஜிக்கல் மாஸ்க்கை எடுத்து போட்டுக்கொண்டான். வேகமாக நடக்க ஆரம்பித்தான். அதன் அருகிலேயே அவசர வார்டு இருந்தது. வெளியே டேவிட் பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தார்.
டேவிட்: வா பைரவ்.
அவர் கண்களில் போதையையும், பயத்தையும் ஒருசேர பார்த்தான்.
ESTÁS LEYENDO
வன்மம் 18+
Acciónஇது ஒரு பாவக்கதை. இளகிய மனம் கொண்டவர்கள் படிப்பதற்க்கான கதை அல்ல. முழுக்க, முழுக்க இருள் சூழ்ந்த மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் இந்தக்கதை. இதில் அதிகப்படியான ஆபாசக்காட்சிகள் வரும் காரணத்தினால் முன்கூட்டியே எச்சரித்துவிடுகின்றேன் இது திறந்த உள்ள...