ரேகாவை மெல்ல திருப்பினான். காதல் கண்ணீராக வடிந்து கொண்டிருக்கும் அவளது கண்களை பார்த்தான். அவளது புருவங்களுக்கு மத்தியில் இருந்த சந்தனத்திற்க்கு மேல் தனது கரிய இதழ்களை பதித்தான். ரேகா அவனை இறுக கட்டியணைத்துக்கொண்டாள்.
ரேகா: என்ன சடனா?
என்று மெல்ல அவனது மார்பில் முத்தமிட்டாள்.
பைரவ்: நாளைக்கு நான் உயிரோட இருப்பேன்னா-ன்னு தெரியாது. நம்ம ரெண்டு பேரும் லைஃப் லாங் இருப்போமான்னு தெரியாது. இன்னைக்கு இந்த தருணத்துல நான் வாழனும்ன்னு ஆசப்படுறேன் ரேகா. "என் தனிமை போக்க வந்த சாபவரம் நீயடி".
என்று மெல்ல அவளது நெற்றியில் மீண்டும் அழுத்தமான் ஆழமான ஆத்மார்த்தமான முத்தமிட்டான்.
ரேகா: அது என்ன டா வரச்சாபம்?
என்று மெல்ல அவனது நெஞ்சில் சாய்ந்தவாறே அவனது கண்களை பார்த்து கேட்டாள்.
பைரவ்: நீ வரமா? சாபமா?-ன்னு எனக்கே தெரியல அதான். சரி நீ எங்கையோ கிளம்பனும்ன்னு சொன்னியே?
என்று மெல்ல அவளது இருகன்னங்களிலும் கையை வைத்தான். அவளது கண்களை பார்த்து காதல் பொங்க அவள் மனதின் ஆழத்தை அளந்து கொண்டிருந்தான்.
ரேகா: தேனிக்கு நகையெடுக்க போகனும் டா. மார்ச் 30 இன்னைக்கு தங்கம் விலை கிராமுக்கு 3,979.30 காசு குறஞ்சிடுச்சு நேத்து 4000 ரூபா. நாளைக்கு எவ்வளவு ஆகப்போதுன்னு தெரியல. அப்பா காசு கொஞ்சம் இருக்கு டா. இப்போ நகை எடுத்து வச்சா லாக்டவுன் அப்புறம் நல்ல விலைக்கு போகும்ல. எல்லாரும் கோல்டு & மெடிக்கல் கம்பெனிஸ்-ல தான இப்போ அதிகமா இன்வெஸ்ட் பண்ணுறாங்க அதான். சரி நீ எதுக்கு திடீர்னு ஒரு நாள் மட்டும் பொண்டாட்டியா இருப்பியான்னு கேட்க்குற? நான் தான் உன்ன கல்யாணம் பண்ணிக்க ரெடின்னு தான சொன்னேன்.
என்று மெல்ல அவனது காதலுடன் அன்பு கலந்த பொய்க்கோப பார்வையுடன் அவனை பார்த்தாள்.
பைரவ்: நீ ரெண்டு மனசோட தான் இந்த டிசிசன் எடுத்த. நான் செத்துறக்கூடாதுன்னு பயத்துல இருக்க பயத்துனால தான். நான் உயிரோட இருக்கனும்ன்னு-ங்குற ஆசைனால வந்த பயம். அதே சமயத்துல என் வாழ்க்கை நல்லா இருக்கனும்னு நினைக்குற ஆசை. அதே மாதிரி உன்னால என் வாழ்க்கைக்கு கெட்டுப்போயிடக்கூடாதுங்குற ஒரு பயம். நீயும் நானும் கல்யாணம் பண்ணா கண்டிப்பா பெரிய பிரச்சினை தான் வரும். நீ செம்ம ஸ்மார்ட் செல்லம். நீ சொன்னது எனக்கு இப்போதான் புரியுது. எப்படியும் இரண்டு நாளுல கோயம்புத்தூர் போயிடுவேன். நான் இருக்குற வரைக்கும் என்னோட பொண்டாட்டிய இரு போதும்.
ESTÁS LEYENDO
வன்மம் 18+
Acciónஇது ஒரு பாவக்கதை. இளகிய மனம் கொண்டவர்கள் படிப்பதற்க்கான கதை அல்ல. முழுக்க, முழுக்க இருள் சூழ்ந்த மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் இந்தக்கதை. இதில் அதிகப்படியான ஆபாசக்காட்சிகள் வரும் காரணத்தினால் முன்கூட்டியே எச்சரித்துவிடுகின்றேன் இது திறந்த உள்ள...