பைரவ் மெல்ல ரேகாவின் கண்களில் விரிவடையும் கருவிழிகளை தனது கண்களால் கண்டுகொண்டிருந்தான். கணவனை கண்டவுடன் கன்னியரின் கன்னங்களில் கலந்து கொள்ளும் வெட்கம் என்ற வேற்றுக்கிரக விசித்திர உணர்வு அவளையும் சூழ்ந்து கொண்டது. அவனை ஆளுமை செலுத்தும் கண்களும் சிமிட்டுவது என்றால் என்னவென்றே தெரியாத கண்கள் நிலைத்து விரித்து அவளது கண்களை பார்த்துக்கொண்டிருந்தது.
பைரவ்: உன்ன தான் என்னாச்சு?
என்று ரேகாவினை கற்பனை உலகில் கறைந்திருந்தவளை நிஜ உலகத்திற்க்கு கூட்டி வந்தான். கற்பனையிலையே காலம் தள்ளுபவர்கள் இந்த கன்னியர்கள் என்பது சரியாகத்தான் உள்ளது.
ரேகா: அதுவா?
என்று பைரவ்-ஐ ஓர வஞ்சனையாகவும், வசீகரிப்பது போலவும் தனது விழிகளை சுருக்கி அவனது ஆத்மாவினை சுண்டியிழுக்கும் ஒரு பார்வையை பார்த்து மூடியிருந்த இதழ்கள் இரண்டும் மெல்ல திறந்து அவளது இதழ்களின் இடையில் அவளது இதழ்களுக்கு அடிமையாக இருந்த எச்சில் என்னை விட்டு நீங்காதே என்று மன்றாடுவது போல இரண்டு இதழ்களுக்கும் இடையில் மீண்டும் இதழ்களை சேர்க்கும் முயற்ச்சியில் கோடுபோல் விரிந்தது.
பைரவ்: அது தான்...
என்று அடக்கமான மிகவும் அமைதியான பையன் போல் கேட்டான்.
ரேகா: நைட் ஆனா மாடி விட்டு மாடி தாண்டுவாருல ஒரு சூப்பர் மேன் அவரு இன்னைக்கு மாட்டிக்கிட்டாரு.
என்று சொல்ல ரேகாவும், பைரவ்-ம் இணைந்து சிரிக்க ஆரம்பித்தார்கள். "இனிமேல் நமது இதழ்கள் இணைந்து சிரிக்கும் ஓசை கேட்க்குமே..." என்ற வசீகர வரிகளின் வலிமை இப்பொழுது தான் தெரிகின்றது. இவரையும் இருதயங்கள் இரண்டும் இணைக்கத்துடிக்க உடல் இரண்டும் கட்டியணைத்துக்கொள்ள காட்டுமிராண்டித்தனமான எண்ணங்களை ஹார்மோன்கள் வழியாக இருவரின் உடலிலும் பாய்ச்சிக்கொண்டிருக்கின்றது இந்த மனித அறிவால் புரிந்து கொள்ள முடியாத மனித மூளை. திடீரென்று வீட்டினுள் இருந்து குக்கர் விசில் சத்தம் கேட்க அம்பிகா வேகமாக உள்ளே சென்றார். எண்ணங்கள் ஒரேமாதிரி இருந்தால் இந்த பிரபஞ்சம் அந்த செயலை செய்து முடிக்கும் என்பார்கள். இருவரின் மனதினுள்ளும் மறைந்திருந்த அந்த மாய மர்ம எண்ணம் இது தானா? ஏன் இந்த காதலர்கள் நாம் மட்டும் வாழ தனி பூலோகம் வேண்டும் என்று கேட்கின்றார்கள் என்று புரிவதில்லை. மற்றவர்கள் பார்க்கின்றார்கள் என்பதற்க்காக என்று புரிந்தாலும் இவர்களின் எண்ண அலைகள் சமுத்திர அலைகளை விட மிக உயரமாகத்தான் இருக்கின்றது.
BINABASA MO ANG
வன்மம் 18+
Actionஇது ஒரு பாவக்கதை. இளகிய மனம் கொண்டவர்கள் படிப்பதற்க்கான கதை அல்ல. முழுக்க, முழுக்க இருள் சூழ்ந்த மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் இந்தக்கதை. இதில் அதிகப்படியான ஆபாசக்காட்சிகள் வரும் காரணத்தினால் முன்கூட்டியே எச்சரித்துவிடுகின்றேன் இது திறந்த உள்ள...