55.வாழ்க்கை.

6 0 0
                                    

பைரவ்: ஏன் ப்ரோ நம்பிக்கை இல்லையா? அதெல்லாம் இயர்லி மார்னிங் அங்க இருப்பேன்.

என்று மெல்ல பைக்கை ஸ்டார்ட் செய்தான். டர்....டட்...டட்....டட்...டர்.... அந்த ஆர் எக்ஸ் 100 உறுமத்தொடங்கியது.

ராகுல்: ச்சே அப்படியெல்லாம் இல்ல ப்ரோ. எப்படியும் நீங்கப்போனா அங்க இங்க நிப்பாட்டி ஜாயின்ட் அடுச்சிட்டு ஜாலியா போவிங்க அதான். எனக்கு பைக் ரைடுன்னா ரொம்பப்பிடிக்கும். அதுவும் நைட் ட்ராவல் வேற லெவல்-ல இருக்கும்.

அவன் கண்களை ஆழ்ந்து பார்த்தான் பைரவ். அதில் ஒரு வித நம்பிக்கையும், ஒரு கியூரியாசிட்டி-யும் தெரிந்தது.

பைரவ்: Have a seat.

என்று மெல்ல நகர்ந்து உட்கார்ந்தான். அவனுடைய பேக் பாதி இடத்தை அடைத்துக்கொண்டிருந்தது.

ராகுல்: ப்ரோ உங்க பேக்க கழட்டி கொடுங்க நான் மாட்டிக்குறேன். அப்போதான் ஸ்பேஸ் கிடைக்கும் உட்கார.

என்று சொன்னவுடன் பைரவ் மெல்ல பேக்கை கழட்டினான். அதனை ராகுல் மாட்டிக்கொண்டான். இரவு வேளை என்பதால் ஹெல்மெட்டை மாட்டாமல் அதனை சைடு மிரரில் மாட்டி விட்டான்.

ராகுல்: பெட்ரோல் ப்ரோ?

என்று பைரவ்-யிடம் கேட்டான்.

பைரவ்: அதெல்லாம் டேங்க் ஃபுல்லா இருக்கு. நோ வொர்ரீஸ்.

வண்டியை டர்.... என்று புகைகக்க ஆக்சிலேட்டரை திருகினான். அப்படியே வண்டி புறப்பட ஆரம்பித்தது. தனது உணர்வுகளை அங்கேயே புதைத்துவிட்டு வெறும் உடலை மட்டும் கையோடு எடுத்துக்கொண்டு புறப்பட்டான். மெல்ல வண்டி தேவதானப்பட்டி போகும் பாதையில் செல்ல ஆரம்பித்தது. கரிய இருளில் மூழ்கியிருந்த வானம். இறைவன் இவ்வுலகப்படைக்கும் போது இந்த மனிதகுலம் எவ்வளவு துக்கமும்,துயரமும் படப்போகின்றது என்று நினைத்து இவ்வுலகப்படைத்துக்கொண்டிருக்கும் போது. அந்த கல்நெஞ்சக்கடவுளின் கண்ணில் இருந்தும் கண்ணீர் வரத்தொடங்கியது. அந்த கருணை நிறைந்த கடவுளின் கண்ணீர் தான் கரிய இருளாக மாறி இறைவன் இதயத்தின் இரக்கம் நிறைந்திருந்ததால் இருளாக மாறி இருக்கின்றது. அதனால் தான் இந்த இருள் இவ்வளவு இனிமையாக இருக்கின்றது. உயிர்கள் காதல் கொள்ளவும், களவு கொள்ளவும் உருவான தருணம் இரவு, எவ்வளவு சோகமான வாழ்வாக இருந்தாலும் இந்த இருளில் தனிமையில் இருக்கும் போது தாயின் கருவறையில் இருளிலும், தனிமையிலும் இருப்பது போன்ற பாதுகாப்பான உணர்வு உருவானதற்க்கு காரணம் இந்த இனிமையான இருள் தான். மறைந்திருந்து பார்க்கும் மங்கை போல நிலவு பாதி மட்டுமே தெரிந்து கொண்டிருந்தது. மனிதனின் இதயத்துடிப்பு போல நட்சத்திரங்கள் துடித்துக்கொண்டிருந்தது. பிரபஞ்சத்தின் இதயத்துடிப்பு தான் இந்த நட்சத்திரங்களா? இவற்றை பிரபஞ்சத்தின் உயிர்த்துடிப்பு என்று தான் சொல்ல வேண்டும். சிறுவயதில் நம்மிடம் சொல்லியிருப்பார்கள். இறந்தவர்கள் இரவு வானில் நட்சத்திரங்களாக தோன்றுவார்கள் என்று. நமது மனம் தான் கடவுள் நிலை அடைவதற்க்கான கருவியென்று கேள்விபட்டிருக்கின்றேன். மனதை இதயத்தோடு சம்பந்தப்படுத்துவார்கள். அப்படி கடவுள் நிலை அடைந்தவர்கள் தான் நட்சத்திரங்களாக மாறுகின்றார்களா? அப்படியானால் நட்சத்திரங்கள் மின்னுவதுயென்று சொல்லுவதை விட அவை துடித்துக்கொண்டிருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும். அது தான் சரியான பொருள் படும். அந்த பாதி மறைந்த நிலவின் அருகில் ஒரு நட்சத்திரம் மட்டும் பைரவ்-யின் இதயத்துடிப்பு போல துடித்துக் கொண்டிருந்தது. இரவின் இனிமை கலந்த இனிமையான தென்றல் அவன் உடலில் கலந்து ஆன்மாவை அபகரித்து செல்கின்றது. அவனது உடல் பைக்கில் சென்று கொண்டிருக்க அவனுடைய ஆத்மாவோ காற்றில் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றது. வண்டி அப்படியே செம்பட்டியை தாண்டி போய்க்கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் பழனியை நோக்கி வண்டி சென்று கொண்டிருந்தது. நல்ல பெரிய தார்ச்சாலை கார்களும்,ஸ்லீப்பர் பஸ்கள் மட்டும் அதிகமாக வந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே Reflective lights மற்றும் ஸ்டிக்கர்கள். மேலே பச்சை நிறத்தில் பெரிய பலகை அதில் ஒட்டன்சத்திரம் 27 கிலோமீட்டர்,பழனி 60 கிலோமீட்டர், கோயம்புத்தூர் 120 கிலோமீட்டர் என்று எழுதியிருந்தது. சுற்றிலும் புளியமரங்கள், அருகில் தென்னை தோப்புகள். மெல்ல வண்டி கன்னிவாடி சென்றது.

வன்மம் 18+Where stories live. Discover now