பைரவ் அப்படியே சென்று ஐஸ் கட்டிகளையும் எடுத்து வந்தான். அப்படியே ஓபரா இசையை டீவியில் கணெக்ட் செய்து போட்டுவிட்டான். தரையில் உட்கார்ந்து டீச்சர்ஸ் விஸ்கியை ஒரு கிளாசில் ஊற்றினான். அருகில் பீஃப் ஃபிரெய்டு ரைஸ் மற்றும் பீஃப் சுக்கா, பீஃப் சில்லியை திறந்து வைத்தான். அப்படியே மெல்ல ஓசிபியில் கஞ்சாவை சுற்ற ஆரம்பித்தான். மெல்ல சுற்றி வாயில் வைத்து பற்ற வைத்தான். அப்படியே ஒரு ரவுண்டு அடித்தான். பீஃப் ஃபிரெய்டு ரைஸை எடுத்து வாயில் போட்டான். மீண்டும் கிளாசில் சற்று ஐஸ் கியூப்-களை போட்டான். மெல்ல டீச்சர்ஸ் விஸ்கியை அடுத்த ரவுண்ட் ஊற்றினான். ஊற்றிக்கொண்டிருக்கும்போதே மெல்ல அந்த விஸ்கி துளித்துளியாக பறக்க ஆரம்பித்தது. பைரவ்-ம் மெல்ல பறக்க ஆரம்பித்தான். அந்த இடத்தில் இருந்த புவியீர்ப்பு விசை காணாமல் போனது. பைரவ் அப்படியே மிதக்க ஆரம்பித்தான். பீஃப் ஃபிரெய்டு ரைஸ், சரக்கு பாட்டில், வாட்டர் ஜக் என்று அனைத்தும் பறக்க ஆரம்பித்தது. அந்த விஸ்கி துளித்துளியாக ஒன்றுடன் ஒன்று சேர்ந்தது. நீர் மூலக்கூறுகளாகிய ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து நீர் மூலக்கூறு உருவாவதைப்போல விஸ்கித்துளிகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஒரு பெண்ணின் உருவத்தை அடைந்தது. அந்த பெண் உருவம் மெல்ல பைரவை நெருங்கி வந்தது. அவனது நெற்றியில் முத்தமிட்டது. அவன் அப்படியே தரையில் உட்கார்ந்திருந்தான். விஸ்கியால் உருவான ஒரு பெண். அது வேறுயாரும் இல்லை ஆதினி தான். என்ன நடக்கின்றது என்று அவனுக்கே புரியவில்லை. மெல்ல கஞ்சாவை அந்த பவுலில் அனைத்தான். வயிறு பசிக்க ஆரம்பித்தது. மெல்ல பீஃப் ஃபிரெய்டு ரைஸை சாப்பிட ஆரம்பித்தான்.
பைரவ்: என்னடா காலையில இருந்து காணாமேன்னு பாத்தேன்.
என்று மெல்ல பீஃப் பீஸ்களை சவுக்கு சவுக்கு என்று மென்று கொண்டிருந்தான்.
ஆதினி: என்ன ரொம்ப மிஸ் பண்ணியா பைரவ்?
என்று தனது தெய்வீகக்குரலில் அவனை வசியம் செய்து ஆரம்பித்தாள்.
YOU ARE READING
வன்மம் 18+
Actionஇது ஒரு பாவக்கதை. இளகிய மனம் கொண்டவர்கள் படிப்பதற்க்கான கதை அல்ல. முழுக்க, முழுக்க இருள் சூழ்ந்த மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் இந்தக்கதை. இதில் அதிகப்படியான ஆபாசக்காட்சிகள் வரும் காரணத்தினால் முன்கூட்டியே எச்சரித்துவிடுகின்றேன் இது திறந்த உள்ள...