33.எதுவுமே நியாபகம் இல்ல.

11 1 0
                                    

மெல்ல எழுந்தான். நெஞ்சையும்,வயிற்றையும் போட்டு ஏதோ அமுக்கியது போன்று இருந்தது. உடை எதுவுமில்லாமல் நிர்வாணமாக உட்கார்ந்திருந்தான். மெல்ல கட்டிலில் இருந்து எழுந்தான். மெல்ல தனது மொபைல் ஃபோனை ‌எடுத்துப்பார்த்தான். மணி 9:11 என்றுக்காட்டியது. தனது அறையில் இருந்து வாட்டார் ஜக்கில் இருந்து தண்ணீரை குடித்தான். வாயில் இருந்து சுவை நரம்புகள் அனைத்திலும் எத்தனால் கலந்த காரணத்தால் ஒரு மாதிரியாகவே இருந்தது தண்ணீரின் சுவை. மெல்ல தண்ணீரை குடித்துவிட்டு. டெஸ்க் மேல் இருந்த சிகரெட் பாக்ஸில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்தான். மெல்ல பாத்ரூமிற்க்குள் நுழைந்தான். வெஸ்டர்ட் டாய்லெட்டில் உட்கார்ந்து கஞ்சாவை சிகரெட்டில் ஏற்ற ஆரம்பித்து. மெல்ல பற்ற வைத்து கஞ்சா சிகரெட்டை புகைக்க ஆரம்பித்தான். புகையை உள்ளிழுத்துவிட்டு ஹாஆஆஆஆ... என்று வாயை மெல்ல திறந்தான். அவன் உடலுக்குள் இருந்து ஆன்மா வெளியே வருவது போல கஞ்சா புகை வெளியே பறந்தது.  மெல்ல அந்த புகையையே பார்த்துக்கொண்டிருந்தான் பைரவ். யாரோ பாத்ரூம் கதவை தட்டும் சத்தம் கேட்டது.

பைரவ்: யாரு?

போதைக்குரலின் எடுத்துக்காட்டாக.

உத்தமன்: டேய் சீக்கிரம் குளிச்சுட்டு கிளம்பு இன்னைக்கு நிறைய வே இருக்கு. ரேகா வீட்டுல சாப்பிட கூப்பிட்டாங்க. சீக்கிரம் போய் சாப்பிடணும். லேட் ஆக்கக்கூடாது.

என்று உத்தமன் அவனிடம் பேசிக்கொண்டிருந்தார். மெல்ல எழுந்தான். சிகரெட்டை உள்ளே போட்டுவிட்டு ஷவர் அருகே வந்து நின்றான். மெல்ல ஷவரை திறந்தான். குளிர்ந்த நீர் மெல்ல பாயத்தொடங்கியது. மெல்ல அவனது உடல் முழுதும் அந்த நீர் பட்டது. மெல்ல அண்ணாந்து அந்த நீர் விழுவதையே பார்த்துக்கொண்டிருந்தான். மழை விழுவது போல அவனுக்கு தோன்றியது. ஆதினியின் நினைவும் அவனுக்கு வந்தது. நீர்த்துளிகள் மெல்ல அவனது நிர்வாண உடலில் வழிந்து கீழே செல்கின்றது. குளித்து முடித்து விட்டு மெல்ல வெளியே வந்தான். உத்தமன் ஹாலில் உட்கார்ந்து புகைப்பிடித்துக்கொண்டிருந்தார். ஒரு ஜீன்ஸ் பேண்ட் மற்றும் மஞ்சள் நிற ரேமண்ட் சட்டை அணிந்திருந்தார். பைரவ் ஒரு ஊதா நிற காட்டன் பேண்ட் மற்றும் வெள்ளை நிற சட்டையை எடுத்து போட்டுக்கொண்டான். இருவரும் வீட்டை பூட்டிவிட்டு கிளம்பினார்கள் கையில் ஃபையிலுடன். கீழே வந்து இருவரும் ரேகாவின் வீட்டில் சாப்பிட்டார்கள். அப்படியே கிளம்பினார்கள். பைரவ் மெல்ல வண்டியை எடுத்து துடைத்தான். பிறகு ஏறி அமர்ந்தான். வண்டியை ஸ்டார்ட் செய்தான் டர்..... டட்....டட்.... என்ற சத்தம் வண்டியிலிருந்து வெளியே கேட்டது. ஆதினியை கையில் ஏந்திக்கொண்டு ரேகா வெளியே நின்றிருந்தாள். ஆதினியின் பிஞ்சுக் கையை தூக்கி ரேகா மெல்ல கையசைத்தாள். ஆதினி மெல்ல கள்ளம் கபடம் அற்ற தெய்வீகப்புன்னகை பூத்தாள்.

வன்மம் 18+Unde poveștirile trăiesc. Descoperă acum