74.இராட்சசன்

25 0 0
                                    

பைரவ் அந்த ஃபோனை கட் செய்தான்.

மெல்ல ஆரீஃப்-ஐ பார்த்து உட்கார்ந்து இருந்தான்.

ஆரீஃப்: 10 கிலோ இருக்கா?

என்று தனது ஆச்சரியமடைந்த ஆன்மாவை மறைத்துக்கொண்டு மெளனமாக கேட்டார்.

பைரவ்: ஆமாங்க சார். ஜஸ்ட் 10 கேஜி.

என்று சொல்லிவிட்டு. கஞ்சா ஓசிபியை பாக்கெட்டில் இருந்து எடுத்து பற்ற வைத்தான். அப்படியே தனது சிவந்த கண்களால் ஆரீஃப்-ஐ பார்த்தான். தேசிங்கு எதுவும் பேசாமல் மெளனமாக உட்கார்ந்து இருந்தான். அங்கே என்ன நடக்கப்போகிறது என்பதை ஊகிக்க முடியாமல். மெல்ல தனது வாயை திறந்தான்.

தேசிங்கு: சரி, எவ்வளவுன்னு விலை பேசலாமா?

என்று அவரை பார்த்து கேட்டான். ஆரீஃப் மெல்ல பைரவ்-ஐ பார்த்தார்.

ஆரீஃப்: எனக்கு டீலிங் இவன் கூட‌ தான்.

என்று சொல்லிவிட்டு. மெல்ல பாக்கெட்டில் இருந்து ஒரு கொக்கைனை பாக்கெட்டில் இருந்து எடுத்து மேசையின் மீது கோலம் போடுவது போல படற வைத்தார்.

பைரவ்: சார், இந்த சரக்கு இங்க வந்ததுக்கு காரணம் இவர் தான். இவர் தான் இதுக்கு ஓனர்.So, give him some respect.

என்று உணர்வுகள் இல்லாமல் அந்த வார்த்தைகளை வடிவமைத்து வெளியிட்டான்.

ஆரீஃப்: சரி,‌ ரெண்டு பேரும் பேசிட்டு எவ்வளவுன்னு சொல்லுங்க?

என்று சொல்லிவிட்டு அந்த கொக்கைனை தனது ஏடிஎம் கார்டு கொண்டு வரிசை, வரிசையாக மூன்று வரிசை அடுக்கி வைத்தார்.

பைரவ்,மெல்ல தேசிங்கு-கிற்க்கு கஞ்சா ஓசிபியை மாற்றி விட்டான்.

பைரவ்: நீ சொல்லுறது தான் ப்ரோ அமெளண்ட். நீ தான் இவ்வளவு ரிஸ்க் எடுத்து இவ்வளவு பண்ணிருக்க.

என்று தேசிங்-ன் ஆன்மாவை ஆழ்ந்து பார்த்தான்.

தேசிங்கு: நீ ஆல்ரெடி ப்ளான் பண்ணிருப்ப பைரவ் நீயே சொல்லிடு.

என்று தனது கஞ்சா போதையின் புத்தரின் போதனைகள் பூக்கும் புன்னகை புரிந்தான். பைரவ், மெல்ல சிந்தனையை சிரிப்பாய் வெளியிட்டான். அப்படியே மெல்ல திரும்பி, ஆரீஃப்-யை பார்த்தான்.

வன்மம் 18+Donde viven las historias. Descúbrelo ahora