மனதில் எரியும் வன்மம் அவனது வாய் வழியாக புகையாய் வெளியே வந்தது. மெல்ல அந்த பெண்ணை பார்த்தான். தான் வெறும் உள்ளாடையுடன் நிற்கின்றோம் என்பது அவனக்கு நினைவு வந்தது. மெதுவாக அரக்கன் இருளிற்க்கு வருவது போல் மீண்டும் பின்பு வந்து அந்த இருளில் மூழ்கினான். அந்த பெண் பார்ப்பதற்கு ஒரு 27 வயது இருப்பது போல் காட்சியளித்தாள். நல்ல கருப்பான நிறம். கருப்பு என்றாலும் நல்ல கலையான கருப்பு. அவளது நாடி அமைப்பு பார்ப்போரை அவளை ஈர்க்கும் வண்ணம் அமைந்திருந்தது. நெற்றியில் ஒரு மிக நுண்ணிய கோடு போன்று சிறிதளவு சந்தனம் வைத்திருந்தாள். பார்ப்பதற்கு ஆப்பிரிக்க மாடல் பெண் போல் நேர்த்தியாக இருந்தாள். அவளது பிங்க் நிற இதழ்கள் மிகவும் எடுப்பாக இருந்தது. கண்மை இட்டிருந்த நல்ல பெரிய விழிகள். அந்த பார்வையில் என்ன தான் வசீகரம் இருந்தாலும் ஒரு வித திமிரும், மிடுக்கும் தெளிவாக தெரிந்தது. கருப்பு நிற பேண்ட் மற்றும் வெள்ளை நிற டாப்ஸ் போட்டு அதன் மீது கருப்பு நிற கோர்ட் ஒன்றும் போட்டிருந்தால். தனது வலது கையில் சில ஃபையில்கள் வைத்திருந்தாள். வலது கையில் மோதிர விரலில் ஒரு மெல்லிய பூங்கொடி போல தங்க மோதிரம் அவளது விரலை சுற்றி வளைத்திருந்தது. காதுகளில் தங்க ஜிமிக்கி கம்மல் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. இடது கையில் ஒரு டைட்டன் வாட்ச். காலில் ஒரு கருப்பு நிற ஷூ. ஆண் போல கம்பீரமாக மார்பை நிமிர்த்தி நின்றுகொண்டிருந்தாள்.
அவள்: ஹலோ குட் ஈவ்னிங் சார்.
என்றாள். ஆண் இனத்தை அடக்கியாள வந்தவள் போல்.
துரைப்பாண்டி: குட் ஈவ்னிங் திவ்யா. என்ன விசயம்?
சற்று தயங்கியவராய். அவளது பெயர் திவ்யா என்று தெரிந்து கொண்டான். ஆனால், இந்த பெயரை எங்கோ கேட்டது போல் அவனுக்கு தோன்றியது. மெல்ல அந்த கஞ்சா பீடியை புகைத்துக்கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்தான்.
திவ்யா: பைரவ் கேஸ் விசயமா வந்திருக்கேன். ஹீ இஸ் மை கிளையண்ட்.
VOCÊ ESTÁ LENDO
வன்மம் 18+
Açãoஇது ஒரு பாவக்கதை. இளகிய மனம் கொண்டவர்கள் படிப்பதற்க்கான கதை அல்ல. முழுக்க, முழுக்க இருள் சூழ்ந்த மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் இந்தக்கதை. இதில் அதிகப்படியான ஆபாசக்காட்சிகள் வரும் காரணத்தினால் முன்கூட்டியே எச்சரித்துவிடுகின்றேன் இது திறந்த உள்ள...