15.ரொம்ப நன்றி கடவுளே.

27 1 0
                                    

தனது கண்களை மெல்ல திறந்து பார்த்தான். அவன் மிதந்து கொண்டிருந்தான். உடலில் துணிகள் எதுவுமில்லாமல். தாயின் கருவறையில் தவழும் குழந்தை போல் அவள் புவியீர்ப்பு விசை இல்லாத ஒரு இடத்தில் மிதந்து கொண்டிருந்தான். குழந்தை தனது தாயின் வயிற்றுக்குள் சூழல்வது போல அவனும் வானில் சூழல்ந்தான். அவனை சுற்றிலும் வண்ண, வண்ண நிறங்களில் ஒளி மின்னிக்கொண்டிருந்தது. அவன் பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு இடத்தில் மிதந்து கொண்டிருக்கின்றான். எண்ணில் அடங்காத நட்சத்திரங்கள் அவனை சுற்றிலும். வெள்ளையும் நீலமும் கலந்த ஒரு விண்மீன் மண்டலம் அதில் எண்ணில் அடங்காத கிரகங்கள் மனித கண்களுக்கு அப்பார்ப்ட்ட நிறங்கள். ஒரு விண்மீன் மண்டலத்தை பிரபஞ்சத்தில் மிதந்து கொண்டே பார்த்துக்கொண்டிருந்தான். இருள் சூழ்ந்த பிரபஞ்சத்தில் நெபுலாக்களும், கருந்துளைகளும், எண்ணில் அடங்காத கிரகங்கள் ஒட்டுமொத்த பிரபஞ்சத்திற்க்கும் ஒரு விசித்திரமான அழகை கொடுத்தது. எங்கே முடிவு எங்கே தொடக்கம் என்று தெரியாத பிரபஞ்சத்தின் அழகில் சிக்கி சித்ரவதை அனுபவித்துக்கொண்டிருந்தான். திடீரென்று அவனது ஆண்மையில் யாரோ கைவைத்தது போல உணர்ந்தான். சடார் என்று கீழே குனிந்து பார்த்தான். தங்க நிறத்தில் ஒரு பிரகாச ஒளி அவன் முன்பு. என்னதென்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. தாயோடு தொடர்பு கொண்ட தொப்புள் கொடி போல அவனது ஆண்மையை ஏதோ ஒன்று பிடித்து இழுத்தது. தாயின் கருவறையில் உள்ள குழந்தை போல் தனிமையில் பிரபஞ்சத்தின் ஆன்மாவை அசத்தும் அழகில் மயங்கி மிதந்து கொண்டிருந்த அவனுக்கு குழந்தை தாயுடன் பிணைக்கும் தொப்புள் கொடி போல அவனது ஆண்மை ஏதோவொன்றோடு சேர்ந்து கொண்டது. சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் ஒரு பிணைப்பு கிடைத்ததை நினைத்து அவனது‌ மனம் ஆறுதல் அடைந்தது. திடீரென்று அவனது ஆண்மையை பிடித்து தங்க நிற ஒளி அவனை மேலே இழுத்துக்கொண்டு சென்றது.

பைரவ்: ஐய்யோ என் குஞ்சுஉஉஉ......

என்று அழறத்தொடங்கினான். அந்த தங்க நிற ஒளியானது ஒளியாண்டுகள் வேகத்தில் அவனது ஆண்மையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றது. அவன் அப்படியே பிரபஞ்சத்தின் மேங்கள் என்று சொல்லப்படும் நெபுலாவிற்க்குள் புகுந்தான். ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் தான் இப்படி இருக்கின்றது. ஹீலியம் வாயுவினால் உருவான அந்த மிகப்பெரிய நீல மேகத்திறள் அவனுக்கு அவன் முன்னே மிகப்பெரிய கடல் சுனாமி போல் மிக பிரம்மாண்டமாக காட்சியளித்தது.

வன்மம் 18+Where stories live. Discover now