56.கடவுள் நம்பிக்கை இருக்கா?

6 0 0
                                    

நைட் பேட்ரோல் வண்டி உள்ளே நுழைவதை பார்த்தவுடனே தங்களது கையில் இருந்த கஞ்சா சிகரெட்டை கீழே போட்டார்கள் பைரவ்‌ மற்றும் ராகுல். அப்படியே அதனை மிதித்து அணைத்தார்கள். ராகுல் சற்று பதட்டமாகவே இருந்தான்‌ பைரவ் அமைதியாகவும், நிதானமாகவும் காணப்பட்டான். அந்த பேட்ரோல் வண்டி சற்று தள்ளிப்போய் நின்றது. ராகுலுக்கு சற்று நிம்மதியாக இருந்தது. ராகுல் லெமன் டீயையும்,காஃபியையும் வாங்கி வந்தான். பைரவ் லெமன் டீயை வாங்கிக்கொண்டான். பைரவ் அப்படியே அந்த கடைக்கு மெல்ல நடந்து சென்றான். இரண்டு லைட்ஸ் சிகரெட் வாங்கினான். இரண்டையும் ஒரே வாயில் வைத்து பற்ற வைத்தான். அந்தக்கடைக்காரர் சற்று வியப்புடன் பார்த்தார். ஒரு சிகரெட்டை ராகுலுக்கு எடுத்து கொடுத்தான்.

ராகுல்: தேங்க்ஸ் ப்ரோ.

என்று மெல்ல சிகரெட்டை வாங்கி புகைக்க ஆரம்பித்தான். பைரவ் மெல்ல இருள் சூழ்ந்த இரவிற்க்கு தனது இருதயத்தை பரிகொடுத்தான். அந்த பேட்ரோல் வண்டியில் இருந்த இரு போலீஸ்க்காரர்கள் அந்த கடைக்குள் சென்று உட்கார்ந்து கொண்டார்கள்.

ராகுல்: கொஞ்சமில்ல ப்ரோ லாக் ஆகிருப்போம்.

என்று மெல்ல பைரவ்-ஐ பார்த்தான்.

பைரவ்: ப்ரோ ஒரு கிலோ கஞ்சாவோட நீங்க மாட்டுனாலும் 10,000 ரூபா தான் ஃபைன்.  இது அவ்வளவு பெரிய Offensive case இல்ல. A Good lawyer with a briefcase of money can steal more money than a man with a gun.

என்று சொல்லிக்கொண்டே ரேகா கொடுத்த புத்தகத்தை எடுத்தான் வண்டியிலிருந்து.

பைரவ்: God father. இதுதான்‌ என்னோட குரான்,பைபிள், பகவத்கீதை. என்னோட ஹோலி புக் இதான்.

என்று மெல்ல அந்த இருளில் சாத்தான்களின் இரத்தத்தால் எழுதப்பட்ட புத்தகத்தை காட்டினான்.

ராகுல்: இந்த மூவி பாத்துருக்கேன் ப்ரோ. நாவல் இப்பதான் பாக்குறேன்.

என்று அவனை பார்த்தான்‌ காஃபியை‌ குடித்துக்கொண்டே.

பைரவ்: லைஃப்-ல ஒரு தடவையாச்சும் இதப்படுச்சு பாருங்க ப்ரோ.

வன்மம் 18+Donde viven las historias. Descúbrelo ahora