கஞ்சாவை புகைத்து புகையை வெளியே ஊதினான் பைரவ்.
பைரவ்: டேய் அந்த ரெண்டு பாக்ஸையும் இங்க எடுத்துட்டு வாடா.
என்று அமரை பார்த்து அழைத்தான். அவன் அந்த இரண்டு பெரிய பாக்ஸையும் எடுத்துக்கொண்டு வந்தான். பைரவ் அருகே நெருங்காமல் இரண்டையும் வைத்தான். அதில் ஒரேயொரு பேக்கேஜ் மட்டும் திறக்கப்பட்டிருந்து. மற்றொன்று அப்படியே இருந்தது. ஒன்றில் இருந்து ஒரு பாக்ஸ் மட்டும் எடுக்கப்பட்டிருந்தது.
பைரவ்: என்ன ப்ரோ. ஒரு பாக்ஸ்ன்னு சொன்ன. இரண்டு இருக்கு எப்படி?
என்று மெல்ல டேவிட்டை பார்த்தான்.
டேவிட்: டேய் எனக்கே புரியல டா. ஒரு பாக்ஸ் ஒரு லட்சம்ன்னு தான் சொன்னான். அவன் கிட்ட காசு கொடுத்தது மட்டும் தான் நியாபகம் இருக்கு.
என்று மெல்ல பைரவ்-யை பார்த்தார். அவர் கண்களை சொல்லியது அவர் பொய் சொல்லவில்லை என்று.
தேசிங்: டேய் அதான் மாத்திர வந்திருச்சுல. அப்பறம் என்னடா சுன்னிகளா. இப்ப இந்த பக்கம் தான வரணும். வாங்கடா புண்டைங்களா கூதியக்கிழிக்குறேன்.
என்று மெல்ல தனது கையில் இருந்த வாள் போன்ற கத்தியை இறுகப்பிடித்தான். பைரவ் மெல்ல லைட்டரை எடுத்தான். தேசிங்கு ஏய்ய்.... என்று கத்தினான்.
பைரவ்: அந்த ராகுல் நம்பர் இருக்கா? இருந்தா கால் பண்ணி கேளுங்க ப்ரோ.
டேவிட்: இல்லடா அந்த பையன் நம்பர். இப்போ என்னடா பண்ணுறது.
பைரவ் மெல்ல எழுந்தான்.
பைரவ்: ஹே கபில் உங்க எல்லாருக்கும் ஆஃபர் தரலாம்ன்னு இருக்கேன்.
அந்த முப்பது நபரும் அவனை பார்க்கத்தொடங்கினார்கள். மெல்ல பைரவ் அந்த காக்கி நிற இரண்டு அட்டை பெட்டிகளை பார்த்துக்கொண்டிருந்தான். அதில் ஃப்ரம் அட்ரஸ் அடிக்கப்பட்டிருந்தது. தெளிவாக இல்லை அட்ரஸ். இங்கு வந்து இறங்கிய பின்பு கிழிக்கப்பட்டிருக்கின்றது. காக்கிநிற டேப்பால் ஒட்டப்பட்டு இருக்கின்றது. அனைவரையும் பார்த்தான் பாக்ஸை பார்த்துவிட்டு.
YOU ARE READING
வன்மம் 18+
Actionஇது ஒரு பாவக்கதை. இளகிய மனம் கொண்டவர்கள் படிப்பதற்க்கான கதை அல்ல. முழுக்க, முழுக்க இருள் சூழ்ந்த மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் இந்தக்கதை. இதில் அதிகப்படியான ஆபாசக்காட்சிகள் வரும் காரணத்தினால் முன்கூட்டியே எச்சரித்துவிடுகின்றேன் இது திறந்த உள்ள...