பைரவ் மெல்ல எழுந்தான். கதவை திறக்க முயன்றான்.
உத்தமன்: நீ உட்காருடா நான் திறக்குறேன்...
என்று பைரவ்-ஐ நிப்பாட்டி விட்டு மெல்ல உத்தமன் எழுந்து சென்று கதவை திறந்தார். போலீஸ் ஸ்டேஷனில் பார்த்த வக்கீல் அங்கே நின்று கொண்டிருந்தார். ஆக்டோபஸ் ஹவுசிங் லோன் பேங்கின் வக்கீல்.
பைரவ்: அங்கிள்... அந்த தேவிடியா மகன பிடிங்க...
என்று வேகமாக தனது ரூமிற்க்கு ஓடினான். தனது ட்ராயரில் இருந்து சுத்தியலை எடுத்து வந்தான். வேகமாக ஓடி வந்தான்.
பைரவ்: செத்தடா கோத்தா புண்டா மவனே இன்னைக்கு..
என்று வேகமாக ஓடினான். அதை பார்த்த அந்த வக்கீல் சற்று பயந்து போனார். உத்தமன் படார் என்று கதவை சாத்தினார் பைரவ்-ஐ உள்ளே வைத்துக்கொண்டு. கதவில் சுத்தியலை வைத்து டமார்... டமார்.... என்று தட்டினான்.
பைரவ்: கதவ திறங்க அங்கிள். ஆஆஆஆஆஆஆ......
என்று கதவை டமார்... டமார்.... என்று எத்தினான்.
பைரவ்: கோத்தா உன்மேல கொலவெறி-ல இருக்கேன்டா. இந்த சுத்தியலால அடுச்சு உன் மூஞ்சிய சிதைக்குறேன்டா. ஆர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..... கோத்தா.... கதவ திறங்க அங்கிள்....
என்று கதவின் மீது டமார்...டமார்.... என்று மோதினான். அவன் மனதில் இருந்த சோகம் கோபமாக உருவாகியிருக்கின்றது. சிக்மண்ட் பிராய்ட்-ன் தத்துவம் தான் இவனை பார்க்கும் போது நியாபகம் வருகின்றது. மனதினுள் ஒளித்தோ அல்லது மறைத்து வைக்கும் உணர்வுகள் செத்துவிடவில்லை. அவை மிகக்கேவலமாகவும், உக்ரமாகவும் வெளியே வரும் என்று பிராய்ட் சொன்னது எவ்வளவு உண்மை என்று இவன் செயலே காண்பிக்கின்றது.
பைரவ்: இப்போ கதவ திறக்குறிங்களா. இல்ல உடைக்கவா. கோத்தா உன்ன கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போறேன்டா...
என்று கதவை டமார்...டமார்.... தனது தோள்பட்டையால் இடித்து தள்ளினான்.
உத்தமன்: அமைதியா இரு பைரவ். நான் பேசிட்டு இருக்கேன்-ல.
என்று உத்தமன் கர்ஜித்தவுடன் பைரவ் அமைதியாக உட்கார்ந்தான். வெளியே அந்த வக்கீலோடு, உத்தமன் பேசிக்கொண்டுருந்தார். உத்தமன் பேச்சைக்கேட்டு விட்டு மெல்ல தனது அறைக்கு வந்தான். சுத்தியலை ட்ராயரினுள் வைத்தான். மெல்ல ஹாலில் உட்கார்ந்தான். சிகரெட் பாக்ஸ்-ல் இருந்து ஒரு லைட்ஸ் சிகரெட்டை எடுத்து அதில் பாக்கெட்டில் இருந்து கஞ்சாவை எடுத்து கசக்கி கொண்டிருந்தான். அவசரமாக அவசரமாக சிகரெட்டிற்க்குள் கஞ்சாவை ஏற்றினான். மெல்ல அதனை தன் வாயில் வைத்து லைட்டரை எடுத்து பற்ற வைத்தான். அந்த லைட்டரின் நெருப்பில் ஆதினியின் உருவம் தோன்றியது. மெல்ல கஞ்சாவை புகைக்க ஆரம்பித்தான். நெருப்பு வடிவில் தங்க நிறத்தில் ஜொலிப்பதைப்போல ஆதினி மெல்ல அவன் அருகில் வந்து நின்றாள்.
YOU ARE READING
வன்மம் 18+
Actionஇது ஒரு பாவக்கதை. இளகிய மனம் கொண்டவர்கள் படிப்பதற்க்கான கதை அல்ல. முழுக்க, முழுக்க இருள் சூழ்ந்த மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் இந்தக்கதை. இதில் அதிகப்படியான ஆபாசக்காட்சிகள் வரும் காரணத்தினால் முன்கூட்டியே எச்சரித்துவிடுகின்றேன் இது திறந்த உள்ள...