மெல்ல வண்டியில் புறப்பட்டான். இப்பொழுது வானத்தை நீல நிறம் முழுவதுமாக ஆட்கொண்டு விட்டது. மக்கள் கூட்டமும் சாலையில் பெருகத்தொடங்கியது. நல்ல பெரிய பெரிய கட்டிடங்களை பார்த்துக்கொண்டே பைரவ் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான். பாலக்காடு செல்லும் ரோட்டில் வண்டி சென்று கொண்டிருந்தது. சிவப்பு நிறத்தில் தபால் வண்டி போல கேரளா செல்லும் வண்டிகளும் சென்று கொண்டிருந்தது. சூப்பர் பைக்குகளில் இளைஞர்கள் சர்,டர்,புர்,சொய்... என்று மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்தார்கள். அருகில் அமைதியாக வண்டியில் செல்பவர்களின் அசிங்கசிங்கமான வார்த்தைகளின் வாழ்த்தை காலையிலேயே பெற்றுக்கொண்டு வண்டியில் பறந்து கொண்டிருந்தார்கள். பைரவ் குனியமுத்தூர்-ரை அடைந்தான். ராகம் பேக்கரி தான் ஸ்டாப். மெல்ல அங்கே நின்றான். சிறுவயதில் இங்கே வந்து இறங்கியவுடன் இந்தக்கடையில் ஏதாவது வாங்கி தின்றுவிட்டு போவது தான் அவனுக்கு நியாபகம் வந்தது. தனது பெற்றோர்களுடன் வந்து ஏதாவது வாங்கி சாப்பிட்டுவிட்டு அப்படியே உத்தமனுக்கு ஏதாவது வாங்கிக்கொண்டு போவது போன்ற நினைவுகள் மெல்ல அவனது நிம்மதியை சீர்குலைத்துக்கொண்டிருந்தன. பைரவ் மெல்ல தனது ஃபோனை எடுத்து உத்தமனுக்கு ஃபோன் செய்தான்.
உத்தமன்: ஹலோ?
என்றார் தூங்கி எழுந்த குரலில்.
பைரவ்: குட் மார்னிங் அங்கிள்.
உத்தமன்: குட் மார்னிங்டா. வந்துட்டியா?
பைரவ்: இங்க தான் ராகம் பேக்கரிகிட்டதான் இருக்கேன். உங்க புதுவீடு தெரியாது.
உத்தமன்: இருடா வரேன் அங்கயே ஏதாச்சும் டீ குடுச்சுட்டு வெயிட் பண்ணு.
என்று ஃபோனை கட் செய்தார். பைரவ் மெல்ல அந்தக்கடையை பார்த்தான். சிவப்பு நிற பெயர்பலகையில் கருப்பு நிற ஆங்கில calligraphy எழுத்துக்களால் Raagam என்று பெயர் எழுதப்பட்டிருந்தது. அதன் பின்னே ஒளித்து மறைந்திருந்த டியூப் லைட் அந்த பெயர் பலகைக்கு அழகு கொடுத்தது.கடையின் உள்ளே பொன் நிற ஒளி விளக்கில் கடை பளிச்சென்று தெரிந்தது. கீழே போடப்பட்டிருந்த வெள்ளை நிற டைல்ஸ்க்கும் அந்த வெளிச்சத்தின் எதிரொலிப்பும் கடையை சற்று வசீகரமாக இருந்தது. உள்ளே நுழைந்தான் பைரவ். சற்று வயதானவர்கள் மற்றும் 40 வயது மதிக்கத்தக்க ஆண்கள் மட்டும் உட்கார்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தார்கள். வலது பக்கம் விதவிதமான சாக்லேட்கள், பிஸ்கட்டுகள், கேக்குகள்,காரங்கள், ஸ்வீட்டுகள் என்று அனைத்தும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. குழந்தை போல எதை வாங்குவது என்று தெரியாமல் ஒரு கணம் மெய்மறந்து போய் நின்றான்.
YOU ARE READING
வன்மம் 18+
Actionஇது ஒரு பாவக்கதை. இளகிய மனம் கொண்டவர்கள் படிப்பதற்க்கான கதை அல்ல. முழுக்க, முழுக்க இருள் சூழ்ந்த மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் இந்தக்கதை. இதில் அதிகப்படியான ஆபாசக்காட்சிகள் வரும் காரணத்தினால் முன்கூட்டியே எச்சரித்துவிடுகின்றேன் இது திறந்த உள்ள...