19.ஒயின் ஷாப்.

10 0 0
                                    

அந்த நபர் ஷோபாவில் உட்கார்ந்தார்.

அவர்: டேய் தம் அடிக்கலாம்ல?

என்றார் சற்று சந்தேகமாக.

பைரவ்: அடிங்க அங்கிள் அதெல்லாம் ப்ராப்ளம் இல்ல.

என்று தனது வன்மத்தை மனதிற்க்குள் வைத்துக்கொண்டு போலிப்புன்னகை புரிந்தான். மெல்ல குளோப் ஜாமூன் பாக்கெட் வாங்கினால் கொடுக்கப்படும் கண்ணாடி பவுல் ஒன்றை எடுத்து வந்தான். அதில் ஏற்கனவே சிகரெட் துண்டுகளும் சற்று சாம்பல்களும் இருந்தது. மெல்ல அந்த நபர் தனது வலது பாக்கெட்டில் இருந்து இரண்டு  சிகரெட்டை எடுத்தார். ஒன்றை பைரவ்-யிற்க்கும் இன்னொன்றை தனது வாயிலும் வைத்தார். கிங்க்ஸ் சிகரெட் அது சற்று பெரியதாகவே இருந்தது. நல்ல நீண்ட பஞ்சு காப்பி நிறத்தில்.‌அந்த பஞ்சில் அடியில் தேன் துளி போன்ற படம். பைரவ் தன் வாயில் சிகரெட்டை வைத்து பாக்கெட்டில் கையை விட்டு லைட்டரை எடுத்தான். தன் வாயில் இருந்த சிகரெட்டை பற்ற வைத்தான். அப்படியே அந்த நபருக்கும் பற்ற வைத்து விட்டான். அப்படியே உள்ளே கிட்சனுக்கு சென்றான். அங்கே குக்கரை பார்த்துக்கொண்டு நின்றான். மெல்ல அப்படியே ஒரு சில்வர் செம்பில் தண்ணீர் மோந்து கொண்டு வந்தான். அதை மிகவும் நல்லவன்‌ போல அந்த நபரிடம் கொடுத்தான். அவர் சிகரெட்டை புகைத்துக்கொண்டே தண்ணீரை வாங்கி அருந்தினார். மெல்ல கழுக்,கழுக் என்று அண்ணாந்து எச்சி வைக்காமல் குடித்தார். அவர் தொண்டையில் தண்ணீர் இறங்குவது நன்றாக தெரிந்தது. அந்த கழுத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். மெல்ல டீ பாயில் அந்த செம்பை வைத்தார்.

அவர்: விசயம் தெரியவும் என்ன பண்ணுறதுன்னே தெரியலடா. என் அக்காவும், மாமாவும் இறந்துட்டாங்கன்னு என்னால நம்பவே முடியல டா.

அப்படியே சிகரெட் புகைத்துக்கொண்டே மெல்ல அவரது கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. வந்திருப்பவர் சரஸ்வதி-யின் தம்பி “உத்தமன்”. அவரை சிவில் என்ஜினியரிங் படிக்க வைத்தது பைரவ்-யின் பெற்றோர்கள் தான். தற்போது கோயம்புத்தூரில் Building construction வேலை செய்து கொண்டிருக்கின்றார். வீடுகளை Contract எடுத்து முழுவதுமாக கட்டிக்கொடுப்பது தான் இவரது வேலை. கொள்ளை லாபம் தரும் தொழில் அது. இவருக்கு அங்கே நல்ல பெயரும் உள்ளது. நல்ல கோடிகளில் சொத்து வைத்துள்ளார்.‌ஆனால், பார்ப்பதற்கு மிகவும் சாதரணமாக இருப்பார். இவருக்கு வயது 34 ஆறு வருடங்களுக்கு முன்பு தான் இவருக்கு திருமணம் ஆனது. தன்னை விட ஆறு வயதை கம்மியான பெண்ணை கல்யாணம் செய்தார். பைரவ்-ன் பெற்றோர்கள் தான் அந்த திருமணத்தையும் நடத்தினார்கள். பைரவ்-ன் தாத்தா பாட்டிகள் சிறுவயதிலேயே இறந்துவிட்டார்கள். சொந்தங்கள் இருந்தாலும் இவர்கள் மேல் அதிகமான கடன் இருந்த காரணத்தால் யாரும் வரவேயில்லை. உத்தமன் மற்றும் வந்திருந்தார் தனியாக.

வன்மம் 18+Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin