இதைக் கேட்டவுடன் பைரவ்-ற்க்கு என்ன யோசிப்பது என்றே தெரியவில்லை. வேறு வழியில்லை யாருக்காவது இந்த வீட்டை விற்றால் தான் கடன் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். யாரோ ஒருவருக்கு வீட்டை விற்பதை விட உத்தமனுக்கு விற்பதே மேல் என்று நினைத்துக்கொண்டான். இது நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்துக்கொண்டான். மெல்ல கஞ்சாவை புகைத்தான். அடுத்த ரவுண்டிற்க்கு உத்தமனே அவனது கிளாசில் ஊற்றினார். நன்றாக புகையை வெளியே ஊதினான்.
பைரவ்: எப்படியிருந்தாலும் யாருக்காச்சும் வித்துதான் ஆகணும். அதுக்கு உங்ககிட்டே வித்துடுறேன் அங்கிள். நோ ப்ராப்ளம்.
இருவரும் இறுதியாக சியர்ஸ் என்று சொல்லிவிட்டு நன்றாக பேசி சிரித்துக்கொண்டே மீதமிருந்த மதுவையும் குடிக்க ஆரம்பித்தார்கள். இவ்வளவு இக்கட்டான் சூழ்நிலையில் இருக்கும் போது தனக்கு இப்படிப்பட்ட உதவி செய்த உத்தமனை தன் வாழ்நாள் முழுவதும் மறக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டான். அவரை கொல்லவேண்டும் என்று எதற்க்காக தோன்றியதென்று நினைத்து மிகவும் வருத்தப்பட்டான். தன்னுடைய பிரச்சினைகள் அனைத்தும் முடியப்போவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியுற்றான். பைரவ்-யிற்க்கு எதன் மீதும் பற்றில்லை. தனது மாமாவிற்க்கே வீடை கொடுப்பதை நினைத்து மிகவும் சந்தோசப்பட்டான். அனைத்து சரக்கையும் அடித்து முடித்துவிட்டு பீஃப் அனைத்தையும் சாப்பிட்டுவிட்டு அந்த கவரினுள் பாட்டில்கள் சிகரெட் துண்டுகள் அனைத்தையும் உள்ளே போட்டான். இருவரும் உட்கார்ந்தவாறே மெல்ல கடைசியாக சிகரெட்டை புகைக்கதொடங்கினார்கள். உத்தமனுக்கு சிகரெட்டை பற்ற வைத்து விட்டான்.
உத்தமன்: என்னடா...(ஹிக் என்ற ஏப்பம்) இப்படி மாமா கேட்க்குறேன்னு நினைச்சு தப்பா நினச்சுக்காத. என்கிட்ட அடமானம் வைச்சுக்கோ. நாளைக்கு நல்லா சம்பாரிச்சுட்டு என்கிட்ட இந்த இடத்த வாங்கிக்கோ மாப்ள. இது என்னோட காசு இல்லடா. ஃப்ரெண்ட் ஒருத்தர் கிட்ட தான் காசு வாங்கணும். இது கருப்புப்பணம் அவரு பேர்ல எதுவும் நான் பண்ண முடியாது. அவரோட பினாமி தான் மாப்ள நான்.அதுனால என்பேர்லையோ இல்ல உங்க அக்கா பெயர்லையோ ரிஜிஸ்டர் பண்ண சொல்லுறேன் அதான். எதுவும் சங்கடமா நினச்சுக்காத டா. எனக்கே கேட்க சங்கடமா தான் இருக்கு. உன்ன எல்லா பிரச்சினைல இருந்தும் வெளிய கொண்டு வரணும்தான் பாத்தேன். அக்கா கிட்ட சொன்னேன். அது அப்போ புருஞ்சுக்கல. நான் சொன்னத அன்னைக்கே கேட்டுருந்தா இன்னைக்கு உயிரோட இருந்துருக்கும்ல. ரொம்ப உணர்ச்சிவசப்பட்டாலே இப்படித்தான்டா மாப்ள. வாழ்க்கையில எப்பவுமே உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவும் எடுக்கக்கூடாது.
YOU ARE READING
வன்மம் 18+
Actionஇது ஒரு பாவக்கதை. இளகிய மனம் கொண்டவர்கள் படிப்பதற்க்கான கதை அல்ல. முழுக்க, முழுக்க இருள் சூழ்ந்த மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் இந்தக்கதை. இதில் அதிகப்படியான ஆபாசக்காட்சிகள் வரும் காரணத்தினால் முன்கூட்டியே எச்சரித்துவிடுகின்றேன் இது திறந்த உள்ள...