53.நினைக்கத்தெரிந்த மனமே.

7 1 0
                                    

இருளிலும், தனிமையிலும் மெல்ல மெல்ல மூழ்கிக்கொண்டிருந்தான் பைரவ். வாழ்க்கையின் அடுத்த கட்டம் என்னவென்று தெரியாமல் திகைத்துப்போய் நின்று கொண்டிருந்தான். ஓசிபியில் கஞ்சாவை புகைக்க ஆரம்பித்தான். டீவியில் தனது ஃபோனை கனெக்ட் செய்தான். மெல்ல கஞ்சாவை புகைத்துக்கொண்டே....

நினைக்க தெரிந்த
மனமே உனக்கு மறக்க
தெரியாதா பழக தெரிந்த
உயிரே உனக்கு விலக
தெரியாதா உயிரே விலக
தெரியாதா

மயங்க தெரிந்த
கண்ணே உனக்கு உறங்க
தெரியாதா மலர தெரிந்த
அன்பே உனக்கு மறைய
தெரியாதா அன்பே மறைய
தெரியாதா

நினைக்க தெரிந்த
மனமே உனக்கு மறக்க
தெரியாதா பழக தெரிந்த
உயிரே உனக்கு விலக
தெரியாதா உயிரே விலக
தெரியாதா

எடுக்க தெரிந்த
கரமே உனக்கு கொடுக்க
தெரியாதா இனிக்க தெரிந்த
கனியே உனக்கு கசக்க
தெரியாதா

படிக்க தெரிந்த
இதழே உனக்கு முடிக்க
தெரியாதா படர தெரிந்த
பனியே உனக்கு மறைய
தெரியாதா பனியே
மறைய தெரியாதா....

இந்த பாடல் வரிகளில் மூழ்கிய தனது ஆத்மா-வை பைரவ் தேடிக்கொண்டிருக்கும் போது. கதவு தட்டும் சத்தம் கேட்டது. பாடலை நிப்பாட்டி அப்படியே‌ எழுந்து சென்று கதவை திறந்தான். வெளியே ரேகா வெள்ளை நிற நைட்டியுடன் நின்றுகொண்டிருந்தாள். கணவனை இழந்துவிட்ட விதவைப்பெண் போல அந்த நேரத்தில் காட்சியளித்தாள். இருவருக்கும் அந்த நொடி என்ன செய்வதென்று தெரியவில்லை, பேச்சு எதுவும் வரவில்லை. வார்த்தைகளின் தேடல் மெளனத்தில் முடியும் என்பார்கள். தன்னுள் தொலைந்த இருவரும் இருவரின் இருதயத்துக்குள் தேடிய நாட்களுக்கு முற்றுப்புள்ளி என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடுத்த நிமிடம் நிரந்தரமில்லாத வாழ்க்கை என்று சொல்லுவார்கள் அதன் உண்மைப்பொருள் இதுதானா?

பைரவ்: உள்ள வா ரேகா?

உள்ளே நுழைந்தவுடனே ரேகா பைரவ்-ஐ இறுக கட்டியணைத்துக்கொண்டாள். அவளது ஆத்மா ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தது அவளது கண்களில் இருந்து கண்ணீராக காதல் வழிந்து கொண்டிருந்தது. அவள் கன்னத்தில் கைவைத்து கண்ணில் வடியும் கண்ணீரை துடைத்து விட்டான். கடவுள் வாழும் கருவறையாகிய அவளது கருவிழியை பார்த்தான் அதிலிருந்து வரும் கண்ணீர் சொர்க்கத்தில் கிடைக்கும் அமிர்தத்தை விட புனிதமானது. அந்த கண்ணீரை தொடுவதற்க்கே பலகோடி வருடங்கள்‌ தவம்‌ செய்திருக்க வேண்டும், அப்படியே அவனது இதயத்தில் மெல்ல சாய்ந்து கொண்டாள். அவனது கண்களில் ஒரு கலக்கமும் இல்லை. அவனது இதயம் என்ன சொல்கின்றதென்று அதில் தனது காதை வைத்துக்கேட்டாள். அதில் எவ்வித உணர்வும் இல்லாமல் எப்போதும் போல் நிதானமாக துடித்துக்கொண்டிருந்தது. மெல்ல அவனது சற்று முடி வளர்ந்திருந்த மார்பில் ஒரு முத்தமிட்டாள். அப்போதும் அந்த இதயம் அப்படியே இருந்தது. உணர்வுகள் எதுவுமில்லாமல் அவன் உயிரோடு இருக்கும்போத பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அவளது பின்னந்தலையில் கைவைத்து அப்படியே தனது இதயத்தோடு இறுக அணைத்துக்கொண்டான். மெல்ல அவளது தலையை வருடிக்கொண்டிருந்தான். அப்படியே அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

வன்மம் 18+Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin