ராகுல் ஒரு நிமிடம் திடுக்கிட்டு பைரவ்-ஐ பார்த்தான்.
ராகுல்: உங்களுக்கு எப்படி என்னத்தெரியும்?
என்று சிகரெட் வாயில் இருப்பதைக்கூட கவனிக்காமல் அப்படியே நின்று கொண்டிருந்தான். பைரவ் மெல்ல அவனை உற்று நோக்கினான். ஒரு டினியம் ஜீன்ஸ் பேண்ட் ஒரு வெள்ளை டீசர்ட் அதன் மேல் ஒரு சூப்பர் ட்ரை ஜீன்ஸ் சர்ட். காலில் வெள்ளை நிற ஸ்கெட்சர்ஸ் ஷூ. கையில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் கட்டிக்கொண்டு நின்றிருந்தான். சற்று ஒள்ளியான தேகம். கஞ்சா புகைத்து சற்று ஒட்டிப்போயிருந்த கன்னங்கள். ஆனால், உதடுகள் ஏனோ கருப்பாகவில்லை. ஒரு வித பதட்டத்திலேயே இருக்கும் கண்கள். கிளீன் ஷேவ் செய்த முகம். நல்ல உருண்டை வடிவ கண்ணாடி.
பைரவ்: அன்னைக்கு சுத்தியல் எடுத்துட்டு வந்தேன் நியாபகம் இருக்கா? ராம்-அ அடிக்க.
மெல்ல சிகரெட்டை இழுத்தான் ராகுல். ஏதோவொரு யோசனையில் இறங்கினான்.
ராகுல்: ஹா தெரியும் ப்ரோ. பைரவ் தான நீங்க. ராம்- எல்லாத்தையும் என்கிட்ட சொன்னான். My deepest condolences for your loss.
என்று மெல்ல சிகரெட்டை வாயில் வைத்து புகைக்க ஆரம்பித்தான்.
பைரவ்: If you don't mind.ஃபோன்-ல ஏதோ கோபமா பேசிட்டு இருந்திங்க என்னன்னு தெருஞ்சுக்கலாமா? இப்போ வேற பதட்டமாவே இருக்கிங்க என்னாச்சு ப்ரோ?
என்று அவன் செயலை பார்த்தவுடனே கண்டறிந்து விட்டான் பைரவ்.
ராகுல்: அதெல்லாம் ஒன்னுமில்ல ப்ரோ. I have to go. Train-அ மிஸ் பண்ணிடுவேன் திண்டுக்கல் போகனும்.
என்று சிகரெட்டை கீழே போட்டு அணைக்கப்பார்த்தான்.
பைரவ்: உங்களோட டேப்டளட்ஸ் டீலிங் எல்லாம் எனக்குத்தெரியும் ப்ரோ. கைலாசபட்டி-ல என்ன நடந்துச்சுன்னு கேள்வி பட்டுருப்பிங்கன்னு நினைக்குறேன்.
அப்படியே ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றான் ராகுல்.
ராகுல்: நீங்க என்ன பேசுறிங்கன்னே எனக்கு புரியல ப்ரோ. என்ன கைலாசபட்டி அங்க என்ன நடந்துச்சு?
YOU ARE READING
வன்மம் 18+
Actionஇது ஒரு பாவக்கதை. இளகிய மனம் கொண்டவர்கள் படிப்பதற்க்கான கதை அல்ல. முழுக்க, முழுக்க இருள் சூழ்ந்த மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் இந்தக்கதை. இதில் அதிகப்படியான ஆபாசக்காட்சிகள் வரும் காரணத்தினால் முன்கூட்டியே எச்சரித்துவிடுகின்றேன் இது திறந்த உள்ள...