48.இதான் பிரச்சினை

12 1 0
                                    

பைரவ்: என்ன ப்ரோ ஆச்சு? பொருள் எதுவும் எடுத்துட்டு வரவா? எங்க இருக்கிங்க?

என்று சற்று நிதானத்துடன் கேட்டான்.

டேவிட்: நான் உன் வீட்டுக்கு வரேன் டா. சின்ன பிரச்சினை தான். அவ்வளவு பெரிசு ஒன்னுமில்ல.

என்று ஃபோனை கட் செய்தார். பைரவ் பல கோண சிந்தனைகளில் மூழ்கியவனாய் ஓசிபியில் கஞ்சாவை ஏற்றிக்கொண்டிருந்தான். மெல்ல அதனை பற்ற வைக்கவும், டேவிட் அங்கே வருவதற்க்கும் சரியாக இருந்தது. உள்ளே டேவிட் வந்தார். இருவரும் உட்கார்ந்தார்கள். டேவிட் கையில் ஒரு பேசிக்ஸ் கடையின் பை இருந்தது.

பைரவ்: என்ன ப்ரோ பிரச்சினை?

என்று சொல்லுவதற்க்கு முன்னால் பேசிக்ஸ் பையில் இருந்து பிளாக் டாக் ஃபுல் பாட்டிலை எடுத்தார்.

டேவிட்: இதான்டா பிரச்சினை. இந்த பிரச்சினைய பிடி.

என்று மெல்ல அவனிடம் அந்த பாட்டிலை கொடுத்தார்.

பைரவ்: இதுல என்ன ப்ரோ பிரச்சினை?

என்று கஞ்சா-வை டேவிட்டிற்க்கு மாற்றி விட்டு அந்த பாட்டிலை வாங்கினான்.

டேவிட்: மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு. அப்போ இது பிரச்சினை தான டா? நம்ம அரசாங்கமே அது தான சொல்லுது?

என்று மெல்ல கஞ்சாவை வட்ட வடிவில் புகைத்துக்கொண்டே கேட்டார்.

பைரவ்: அப்புறம் யாரா ஊம்ப கவர்மெண்ட் விக்குது கடையில. இவங்கள எய்ட்ஸ்-அ பரப்புவாங்களாம் அப்புறம் காண்டம் விப்பாங்களாம் அந்த கதையாவுல இருக்கு.

என்று இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்கள்.

பைரவ்: சரி வா ப்ரோ சேர்ந்து போடுவோம்?

என்று சொல்லிக்கொண்டே கஞ்சாவை வாங்கினான். மெல்ல புகைத்துக்கொண்டே டேவிட்டை பார்த்தான்.

டேவிட்: இல்லடா எனக்கு வேண்டாம்.

ஆச்சரியத்துடன் டேவிட்-ஐ பார்த்தான்.

வன்மம் 18+Where stories live. Discover now