சுற்றிலும் இருள் சூழ்ந்த இடத்தில் ஆதினியின் குரல் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்துப்போய் நின்று கொண்டிருந்தான். அவன் காதின் அருகே ஆதினியின் குரல் “நீ பிறந்த இரகசியத்த சொல்லவா”... என்று அந்த தெய்வீகக் குரலில் மெல்ல சிரித்தாள். அவன் முகத்தின் முன் ஆதினியின் முகம் பிரகாசமாக தெரிந்தது. அவனது கன்னத்தில் தனது தெய்வீகக் கரங்களை வைத்தால். அவள் பளிச்சென்ற வெண்ணிற ஒளியில் மின்னிக்கொண்டிருந்தாள். மெல்ல அவனது நெற்றியில் முத்தமிட்டாள். அவன் கண்ணின் கருவிழிகள் மேலே சென்றது. அந்த வெண்ணிறக்கண்ணில் இருந்து வெண்ணிற ஒளி பிரகாசமாக வீசியது.
சாதாரணமாக இருக்கும் ஒரு பெண்ணின் கருவறை. மனித உயிர்கள் உருவாக்கும் தொழிற்ச்சாலை என்று சொல்வதா இல்லை மனித உயிர்களை செதுக்கும் சிற்பக்கூடம் என்று சொல்லுவதா இல்லை மனிதன் என்ற மாயையை உருவாக்கும் மாயாஜாலம் சென்று சொல்வதா. வார்த்தைகளால் விவரிக்க முடியாத விசித்திரத்தையும், வினோதத்தையும், வியப்பையும் ஒருசேரக்கொண்டுள்ள இடம் என்று சொன்னால் கூட மிகையாது.
நல்ல நீண்ட குழாய் செல்கிறது. இதனுள் ஆணுறுப்பு நுழைவதால் தான் அவன் கடவுளாகின்றான். இந்த பெண்குறியின் குழாயினுள் ஆணுறுப்பு சேரும் தத்துவம் தான் சிவலிங்கத்தின் கோட்பாடு. உயிர்கள் உருவாவதையும் ஒரு ஆற்றல் உருவாக்கப்படுவதுமே கடவுள் நிலை என்றும் கூட சொல்லலாம். அந்த குழாய்க்கு இறக்கைகள் முளைத்தது போல இருக்கின்றது. இதுதான் தேவதையின் குறியீடா? பைபிளில் வரும் இறகு முளைத்த தேவதைகள் இவைகள் தானா? இந்த அம்சத்தை பெற்றிருக்கும் அனைத்து பெண்ணும் தேவதைதானோ? அந்த கடவுளும் இந்த கருவறையில் தானே பிறந்திருப்பான்? கடவுளை பிரசிவித்தவலும் பெண்தானே? கடவுளை விடவும் மேலானவள் பெண்ணே. மனிதனாக பிறந்து கடவுள் நிலைக்கு உயர்பவன் தான் கடவுளாகின்றான். இதிகாசங்களில் வரும் கட்டுக்கதைகளால் கடவுளாக யாரும் ஆவதில்லை. மிகவும் புனிதமான வெள்ளை நிறத்தில் இருபுறமும் கருமுட்டைகள் (ஓவரி) பூங்கொத்து போல காட்சியளித்தது. அதன் மேலே தாமரை தண்டு போல வளைந்து இருக்கும் கருமுட்டைக்குழாய் (ஃபிலோபின் டியூப்) அதன் இறுதிபகுதியில் காற்றில் மலரிதழ்கள் போல அசைந்து கொண்டிருக்கும் ஃபிம்ரியேட்டட் இன்ட். பெண்ணுறுப்பின் குழாய்க்கு மேல் குழந்தைகள் சுமக்கப்படும் புனிதமான இடம் இது தான் கர்பப்பையோ (யூட்டரிஸோ)? இந்த ஒப்பற்ற அழகை இரசிக்க இந்த ஜென்மம் போதாது. கோவிலில் கருவறையில் இருக்கும் கற்சிலை கடவுளை வணங்குவதை விட கடவுளையும் சுமந்த இந்த கர்பப்பையை சுமக்கும் பெண்ணையே கைக்கூப்பி கடவுளாக வணங்கலாம். அரைமில்லியனுக்கும் மேலாண கருமுட்டைகளை சுமக்கும் இந்த ஓவரி பிரபஞ்ச அதிசயத்தில் முதலிடம் என்று சொன்னால் கூட மிகையாகாது. இந்த கருமுட்டைகளை பாதுகாக்க இருக்கும் வெளிப்பகுதி கொரானா ரேடியாடா அதற்க்கு கீழ் ஒரு பாதுகாப்பு லேயர் ஸோனா பெல்லுசாடா. இவை இரண்டுயும் விந்தணு துளைத்துக்கொண்டு போனால் கருவுற முடியும். இந்த மனதை மயக்கும் மர்மமும் மாயாஜாலமும் நிறைந்த மங்கையரின் கருமுட்டைகளுக்குள் என்னதான் இருக்கின்றது. இதனுள் 23 “ X “குரோமோசோம்கள் மிதந்துகொண்டுள்ளன. எண்கள் பன்மடங்காவதை குறிக்க பயன்படும் பெருக்கல் குறியீடு போல உயிர்ணுக்களின் செல்கள் பன்மடங்காவதை குறிக்கின்றதோ இந்த பெருக்கல் குறியீடு. இந்த குரோமோசோம்களுக்குள் மறைந்திருக்கும் இரகசியம் தான் என்னவோ? இந்த மர்மமக்குறியீட்டுனுள் சுழன்று கொண்டிருக்கின்றது “மரபணு”. இதனுள் தான் அனைத்து தகவல்களும் இருக்கின்றது. ஏணியை சுழற்றிய வடிவமாக்கினால் எப்படி இருக்குமோ அது போல சுழன்று கொண்டு இருக்கின்றது. இந்த டீஎன்ஏ தான் நமது உடலை கட்டமைக்க உதவும் ப்ளூபிரிண்ட். நமது கண்களில் நிறம், தலைமுடியின் நிறம், உடலமைப்பு, நமது உள்ளுறுப்புகளின் செயலாக்கம் என அனைத்தையும் உள்ளடக்கியது இந்த மிகநுண்ணிய மரபணு. நம்மை தீர்மானிப்பது இதுதான். இந்த அற்புதத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று நினைக்கும் போது. தடார்.... என்று பெண்ணுறுப்பின் நுழைவுக்குழல் வழியாக 300 மில்லியின் விந்தணுக்கள் வேகமாக உள்ளே நுழையத்தொடங்குகிறது. அதில் எக்கச்சக்கமான விந்தணுக்கள் இறந்துவிடுகின்றன. பார்ப்பதற்கு முருகன் கையில் இருக்கும் வேல் போல வெள்ளை நிறத்தில் நெளிந்து கொண்டு வருகின்றது இந்த விந்தணுக்கள். போட்டி போட்டுக்கொண்டு அவை உள்ளே நுழைகின்றது. மெல்ல அவை கருப்பப்பை குழாய் வழியாக கருமுட்டை இருக்கும் இடத்தை சென்றடைகின்றது. வகுப்பறையில் மாணவர்களுக்குள் போட்டி இருக்கும், கோவில் கருவறைக்குள் ஐயர்களுக்குள்ளும், பூசாரிகளுக்குள்ளும் போட்டி இருக்கும். வேலை பார்க்கும் இடத்திலும் போட்டியிருக்கும், சமுதாயத்திலும் போட்டி இருக்கும், இந்த போட்டி நிறைந்த மனித சமுதாயத்திற்க்கான காரணம் விந்தணுக்களின் போட்டிதான் என்று கருதுகின்றேன். அந்த குழாயினுள்ளே பல மில்லியன் விந்தணுக்கள் செத்துவிடுகின்றது. தகுதியுள்ளவை தப்பிப்பிழைக்கும் என்ற இயற்க்கையின் விதி கருப்பைக்குள்ளும் நிகழ்வது ஆச்சரியம் தான். பல விந்தணுக்கள் போட்டி போட்டுக்கொண்டு கரு முட்டைக்குள் நுழைய போட்டிபோட்டுக்கொண்டு இருக்கின்றனர். கொரானா ரேடியாடாவை துளைத்துக்கொண்டு ஒரேயொரு விந்தணு மட்டும் செல்கின்றது. மிகவும் கடினப்பட்டு ஸோனா பெல்லுசாடா என்ற உறையையும் தான்டி ஒரேயொரு விந்தணு மட்டும் உள்ளே செல்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டின் துவக்கம் இந்த கருவுறுதல் நிகழ்வாகத்தான் இருக்க வேண்டும். ஒரு கர்பப்பைக்கு ஒரு விந்தணுதான். சிலசமயம் இரு விந்தணுக்களும் வருவதுண்டு. இரட்டைக்குழந்தைகள் பிறக்க அவைதான் காரணம். ஆனால், அது அதிசய நிகழ்வாக இருந்தாலும் சற்று ஆபத்து நிறைந்தது தான். அந்த விந்தணு நுழைந்தவுடன் ஸோனா பெல்லுசாடா அப்படியே சற்று தடிமனாக மூடிக்கொள்கின்றது. வேறு எதுவும் உள்ளே நுழையாதவாறு. தாய்மை பெண்ணிடம் தான் உள்ளது தாய்மையின் மறுவடிவம் தான் காதல். அவள் மனதில் ஒருவனுக்கு மட்டும் தான் இடம். அதேபோல் அவள் கருப்பையிலும் அவனது விந்தணுவிற்க்கு மட்டும் தான் இடம். பெண்ணை போற்றாத எந்த நாடு உருப்படாது என்பதை உண்மை தான். உள்ளே நுழைந்த விந்தணுவை மெல்ல கட்டியணைத்து வரவேற்கின்றது கருமுட்டை. விந்தணுவில் இருந்து 23 குரோமோசோம்கள் வெளியே வருகின்றது. பெண்ணின் உள்ளே இருக்கும் 23 குரோமோசோம்களும் ஆணின் விந்தணுவில் உள்ள 23 மண் சேர்ந்து 46 ஜோடிகளாக பிண்ணிப்பினைகின்றது. காதலிக்காக கடல் கடந்த வந்த காதலனை கட்டித்தழுவி தன் காதலை பரிமாறி நிகழ்வு இந்த நிகழ்வின் அடிப்படையில் தான் நிகழ்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். குரோமோசோம்கள் ஒன்றோடொன்று இணைவதன் காரணமாக ஜசைகோட் என்ற புதிய செல் உருவாகின்றது.
ESTÁS LEYENDO
வன்மம் 18+
Acciónஇது ஒரு பாவக்கதை. இளகிய மனம் கொண்டவர்கள் படிப்பதற்க்கான கதை அல்ல. முழுக்க, முழுக்க இருள் சூழ்ந்த மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் இந்தக்கதை. இதில் அதிகப்படியான ஆபாசக்காட்சிகள் வரும் காரணத்தினால் முன்கூட்டியே எச்சரித்துவிடுகின்றேன் இது திறந்த உள்ள...