72.இன்று முதல் இரவு

70 0 0
                                    

டேவிட்டும், எஸ்தரும் மெல்ல பைக்கில் உட்கார்ந்து புறப்பட ஆரம்பித்தார்கள். எஸ்தர் இறுக்கமாக டேவிட்டை கட்டியணைத்துக்கொண்டாள். டேவிட்டின் சற்று தாடி வளர்ந்த கன்னத்திற்க்கு அருகே எஸ்தரின் மிருதுவான கன்னம் உரசிக்கொண்டு ஒரு உள்ளத்தினுள் ஒரு உராய்வை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.

டேவிட்: என்னடி செல்லம்?

என்று அவளை பார்க்காமலே அவள் உணர்ச்சியின் உச்சத்தில் இருக்கின்றாள் என்பதை புரிந்து கொண்டவனாய் கேள்வி கேட்டார் டேவிட்.

எஸ்தர்: லவ் யூ டேவிட்.‌ எனக்கு என்ன சொல்லுறது. எப்படி எக்ஸ்பிரஸ் பண்ணுறதுன்னு தெரியல டா.

அவள் கண்களில் வடிந்த கண்ணீர் துளிகள் டேவிட்டின் கன்னத்தில் பட்டது.

டேவிட்: ஏய்? இப்போ எதுக்கு நீ அழுவுற?

வண்டி அன்னஞ்சி என்ற இடத்தை தாண்டி வந்து கொண்டிருந்தது. வலது பக்கம் ஏதோ பாதை சென்றது. அதனுள் பைக்கை விட்டார். அவ்வளவாக ஆள்நடமாட்டம் இல்லாத இடம். அமைதியாக இருந்தது. இருபுறமும் மரங்கள் வளர்ந்து செழித்திருந்தது. அவ்வளவு வெயிலில் அந்த இடம் மட்டும் அந்தகாரம் போல காட்சியளித்தது. மெல்ல வண்டியை நிப்பாட்டினார். அதிலிருந்து பொறுமையாக இறங்கினாள் எஸ்தர். டேவிட் உடனே இறங்கினார். எஸ்தர் அழுது கொண்டே நின்று கொண்டிருந்தாள். மெல்ல அவளது கன்னத்தில் கைவைத்தார். அவள் கண்களில் வடியும் கண்ணீரை துடைத்தார்.

டேவிட்: ஏன்டி, இப்போ அழுவுற?

என்று கண்ணீர் வடிந்து கொண்டிருந்த கண்களை பார்த்தார். மெல்ல அவளது தலையை கோதிக்கொடுக்க காற்றும் சேர்ந்து இருவரையும் அரவணைத்தது. இருவரின் ஆத்மாக்களும் ஒன்றோடுடொன்று கலந்து காற்றில் பறந்து இந்த பரந்த பிரபஞ்சத்தில் சுதந்திரமாக பறந்து திறிய ஆசைப்பட்டது. ஆனால், கடமைகள் என்ற பெரிய கல்லை தூக்கிக்கொண்டு அவைகளால் பறக்க முடியவில்லை. இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்து கடமைகள் என்ற கல்லை சேர்ந்து சுமக்கலாம். காதலால் இந்த கடமைகள் என்ற கல் மட்டுமல்ல மனித மூளையின் கற்பனையான கடவுளையும் கண்களால் காணலாம்.‌ அப்படி கண்ணீர் சிந்தும் எஸ்தரின் கண்களில் கடவுளை கண்டவன் போல் கல்லாய் நின்று கொண்டிருந்தான் டேவிட். மெல்ல அவளது நெற்றியில் முத்தமிட்டார்...

வன்மம் 18+Donde viven las historias. Descúbrelo ahora